OnePlus வெளியிடப்போகும் 6 ஸ்மார்ட்போன்கள் – கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள்!

OnePlus நிறுவனம் தனது கூட்டு நிறுவனமான
Oppo
உடன் இணைந்து பல தயாரிப்புகளை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் மொத்தம் 6 தயாரிப்புகள் டெக் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிக தயாரிப்புகளை குறைந்த இடைவெளியில் ஒன்பிளஸ் சந்தைக்கு கொண்டுவருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் ஒன்பிளஸ் தரப்பில் இருந்து எதிர்பார்க்கப்படும் கேட்ஜெட்டுகள் குறித்து பார்க்கலாம்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரீமியம் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனான OnePlus 10 Pro இந்த மாத இறுதியில் உலகளவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்தவகையில், இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வரவு குறித்த தகவல் வெகு விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன பண்ணி வெச்சிருக்கீங்க iQOO; மண்ட மேல கொண்ட தெரியுது!

ஒன்பிளஸ் புதுவரவு

கசிந்த தகவல்களின் அடிப்படையில், சமீபத்தில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த OnePlus Nord CE 2 5ஜி ஸ்மார்ட்போனின் லைட் வெர்ஷன் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
OnePlus Nord CE 2 Lite
ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்புடன் சுமார் 15,000 ரூபாய்க்கு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து மே மாதத்தில் இரண்டு ஸ்மார்ட்போன்களை சந்தைக்கு கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
OnePlus Nord 2T
,
OnePlus 10R
ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இதில் அடங்கும். இது குறித்த அறிவிப்பை ஒன்பிளஸ் விரைவில் வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை மாதத்தில்
OnePlus Nord 3
வெளியாகலாம் எனத் தெரிகிறது. இது நார்ட் வகை ஸ்மார்ட்போன்களின் ப்ரோ வெர்ஷனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடைசியாக பிளாக்‌ஷிப் OnePlus 10 Ultra ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை இந்த ஸ்மார்ட்போன் OnePlus 10 Pro Plus என்ற பெயரில் டெக் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் நம்பப்படுகிறது.

கடைசியாக வெளியான OnePlus Nord CE 2 5ஜி ஸ்மார்ட்போன், ரியல்மி அளவுக்கு கூட இல்லை என்பது பயனர்களின் கருத்தாக இருந்தது. எனினும், பக்ஸ் இல்லாத நேர்த்தியான இயங்குதளத்தை கொண்டிருக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது பயனர்கள் அதிகமாக நம்பிக்கை வைத்துள்ளனர். வரும் காலங்களில் வெளியிடப்படும் ஸ்மார்ட்போன்களிலும், இதே நிலை தொடரும் என்ற எதிர்பார்ப்பு ஒன்பிளஸ் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 2 சிறப்பம்சங்கள் (OnePlus Nord CE 2 Specifications)
OnePlus Nord CE 2 5G போன் வெளியீடு – புதிய ஒன்பிளஸ் worth-ஆ?

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனில் 6.43″ அங்குல முழு அளவு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே,
MediaTek Dimensity
900 5ஜி சிப்செட், பின்பக்கத்தில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட டிரிப்பிள் கேமரா அமைப்பு, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகியவை சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகிறது.

Gray Mirror, Bahama Blue ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.23,999 ஆக உள்ளது. முறையே 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.24,999 ஆக உள்ளது.

Read more:
குறைந்த விலை Oppo A16e ஸ்மார்ட்போன் அறிமுகம் – முழு விவரங்கள்!
இன்ஸ்டாகிராம்-க்கு குட் பை – ரஷ்யாவின் புதிய ‘Rossgram’ ஆப்!
iQOO Sale: அமேசான் தளத்தில் கிடைக்கும் Clone போன்!

OnePlus-Nord-3 விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்MediaTek Dimensity 1200டிஸ்பிளே6.44 inches (16.35 cm)சேமிப்பகம்128 GBகேமரா48 MP + 8 MP + 5 MP + 2 MPபேட்டரி5000 mAhஇந்திய விலை36360ரேம்8 GBமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.