அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தற்போது கைவிடப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
விருதுநகர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் நிகழ்ந்த இளம்பெண்களின் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது முதலமைச்சர் பதிலளித்துக் கொண்டிருந்த போது, எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு பேச முயன்றார். அப்போது சபாநாயகர் வாய்ப்பு மறுத்ததால், அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.