உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்திற்காக ரஷ்யா மீது உலக நாடுகள் சுத்தி சுத்தி தடை விதித்து அந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகத்தை முடக்கிய நிலையில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டுத் தொடர்ந்து வெளியேறி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவுக்கு வருமானம் ஈட்டும் முக்கியப் பிரிவாக விளங்கும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மீதும் உலக நாடுகள் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்கா தீட்டிய திட்டத்தில் பெரும் தோல்வியைக் கண்டு உள்ளது.
இதை கவனிச்சீங்களா.. ரஷ்யா – உக்ரைன் போர் கொடுத்த சூப்பர் வாய்ப்பு.. அதுவும் 4 துறைகளில்!
உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் போருக்காக ரஷ்யா மீது தடை விதித்த முக்கிய நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா மிக முக்கியமானவை. ரஷ்யா கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விற்பனையின் மூலம் வருடத்திற்கு 110 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை ஈட்டி வருகிறது.
அமெரிக்கா வலியுறுத்தல்
இந்நிலையில் ரஷ்யாவின் நிதிநிலையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அமெரிக்கா முதலில் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை மொத்தமாகத் தடை செய்தது. இதேபோல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் தடை விதிக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியது.
பிரிட்டன் முடிவு
பிரிட்டன் நாடு அமெரிக்காவிற்கு முன்பாகவே கச்சா எண்ணெய் ஆதாரத்திற்கு மாற்று வழியை உருவாக்கிய பின்பு படிப்படியாகக் கச்சா ரஷ்யா உடனான வர்த்தகத்தைக் குறைப்பதாக அறிவித்தது. இதனால் மீதமுள்ள ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா, ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்குத் தடை விதிக்க நிர்ப்பந்தம் செய்தது.
வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு-வை நிறுத்துவதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதற்கு முக்கியக் காரணம் ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தும் 40 சதவீத எரிவாயு மற்றும் 27 சதவீத எண்ணெய் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது.
ஐரோப்பிய நாடுகள் முடிவு
ஐரோப்பிய நாடுகளில் அதிக ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வது ஜெர்மனி. ஐரோப்பிய நாடுகளில் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்யும் பட்சத்தில் தடை விதிக்க முடியாது என ஐரோப்பிய யூனியன் இக்கூட்டத்தின் மூலம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா வர்த்தகம்
இதனால் ரஷ்யாவின் நிதி நிலையைப் பாதிக்கும் அமெரிக்காவின் திட்டம் தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் ரஷ்யா – ஐரோப்பிய யூனியன் மத்தியிலான எரிபொருள் வர்த்தகம் தொடர்ந்து நடைபெறும். அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து மிகவும் குறைந்த அளவிலான கச்சா எண்ணெய் மட்டுமே இறக்குமதி செய்யும் காரணத்தால் எளிதாகத் தடைசெய்தது, ஆனால் மற்ற நாடுகள் அப்படியில்லை.
European Union failed on sanctioning Russian gas and oil
European Union failed on sanctioning Russian gas and oil அமெரிக்காவின் திட்டம் படு தோல்வி.. ரஷ்யாவுக்குச் சாதகமாக மாறியது..!