'அவரை' பற்றி ஐஸ்வர்யா சொன்னது ரொம்ப சரி

முசாபிர்
என்கிற காதல் பாடல் வீடியோவை இயக்கினார்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
. அந்த வீடியோ நேற்று மாலை வெளியானது.

முசாபிருக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. வீடியோவை பார்த்த அனைவருமே ஹீரோ ஷிவினின் நடிப்பை தான் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆத்தா, என் புது காதல் ‘சக்சஸ்’ ஆயிடுச்சு:துள்ளிக் குதிக்கும் ஐஸ்வர்யா
இந்நிலையில் முசாபிர் வீடியோவுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து ஐஸ்வர்யா சந்தோஷத்தில் இருக்கிறார். மேலும் உங்களுக்கு இது வெறும் ஆரம்பம் தான்
ஷிவின்
என தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.

ஷிவின் பற்றி ஐஸ்வர்யா கூறியிருப்பது மிகவும் சரி. இது ஷிவினுக்கு வெறும் ஆரம்பம் தான். இனி அவரின் கெரியர் பிக்கப் ஆகிவிடும் என ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

முன்னதாக ஷிவின் நேர்மையானவர், பொறுமையானவர். அவருடன் சேர்ந்து வேலை செய்ததில் மகிழ்ச்சி என இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார் ஐஸ்வர்யா.

9 ஆண்டுகள் கழித்து மீண்டும் கேமராவுக்கு பின்னால் சென்ற ஐஸ்வர்யாவுக்கு கிடைத்திருக்கும் வெற்றியை தங்களின் வெற்றி போன்று ரஜினி ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

மேலும் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார் ஐஸ்வர்யா. உண்மையான காதல் கதையை இயக்குகிறார். அந்த படத்திற்கு ஓ சாத்தி சல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஐஸ்வர்யாவை தேடி அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.