நெல்லை அருகே நடுக்கல்லூரில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆடுகளின் கூட்டத்திற்குள் வேகமாக வந்த லாரி புகுந்த நிலையில், 37 ஆடுகள் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தன.
நாகராஜன் என்பவர் தாம் வளர்ந்து வரும் நூறு ஆடுகளை கல்லூர் ரயில்வே கேட் அருகே மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்றிருக்கிறார். அந்த பகுதியில் காடுகளுக்கு நடுவே சாலை அமைந்திருக்கும் நிலையில், சாலையின் வலது புறத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நாகராஜன், பின்னர் சாலையின் இடது பக்கமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
ஆடுகள் முன்னே சென்று கொண்டிருந்த நிலையில், நாகராஜன் பின்னாடியே வந்திருக்கிறார். அச்சமயம், அவ்வழியாக வேகமாக வந்த லாரி சாலையை கடந்து சென்ற ஆடுகளின் கூட்டத்திற்குள் புகுந்தது. ஆடுகள் கூட்டத்திற்குள் லாரி புகுந்ததால் 37 ஆடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. 16 ஆடுகள் படுகாயமடைந்தன.
விபத்து நிகழ்ந்ததும் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தலைமறவையான ஓட்டுநர் சுவாமி நாதனை போலீசார் தேடி வருகின்றனர்.