இளம் ஹிந்துப் பெண் பாக்.,கில் சுட்டுக் கொலை

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் பரபரப்பு மிக்க சாலையில்18வயதான ஹிந்துப் பெண், கடத்தல்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.குறிப்பாக, இளம் ஹிந்துப் பெண்களை கடத்திச் சென்று, வலுகட்டாயமாக இஸ்லாத்துக்கு மதமாற்றி, திருமணம் செய்து வைப்பது தொடர்ந்து நடக்கிறது.

இது பற்றி, பாகிஸ்தான் அரசிடம் மனித உரிமை அமைப்புகள் பல முறை புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், சிந்து மாகாணம், சுக்கர் மாவட்டம், ரோஹர் நகரைச் சேர்ந்த பூஜா, 18 என்ற ஹிந்துப் பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்வதற்காக, சிலர் கடத்திச் சென்றனர்

.பூஜா அவர்களிடம் இருந்து போராடி தப்பி ஓடிய போது, கடத்தல்காரர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். குண்டு பாய்ந்ததில், சாலையின் நடுவே ரத்த வெள்ளத்தில் விழுந்து பூஜா இறந்தார்.இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.