பொதுவாக இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே நரை அல்லது வெள்ளை முடி வந்து பலருக்கும் முதுமைத் தோற்றத்தைக் கொடுக்கிறது.
இந்த வெள்ளை முடியை மறைப்பதற்கு பலர் ஹேர் டைகளைப் பயன்படுத்துவார்கள்.
ஆனால் ஹேர் டை பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்களால் ஸ்கால்ப்பில் உள்ள செல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மயிர்கால்கள் வலுவிழந்து முடி உதிர ஆரம்பித்துவிடும்.
இதுபோன்ற பிரச்சினைகளை சந்திக்கமால் இருக்க ஒரு அசத்தலான வழிமுறை ஒன்றை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- ஆலிவ் எண்ணெய் – 2 தேக்கரண்டி
- மீன் எண்ணெய் / காப்ஸ்யூல் – 2 தேக்கரண்டி
- அலோ வேரா ஜெல் – 2 டீஸ்பூன்
செயல்முறை
முதலில், ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சம அளவில் கலக்கவும். சிறிது நேரத்தில் எண்ணெய் தயாராகிவிடும்.
முதலில் முடியை நன்கு கழுவி உலர வைக்கவும். இப்போது வேர்களில் நன்றாக எண்ணெய் தடவி, மசாஜ் செய்யவும். குறைந்தது 5-7 நிமிடங்களுக்கு முடியை மசாஜ் செய்ய வேண்டும்.
இப்போது குறைந்தது 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட்டு, ஷவர் கேப்பால் மூடி வைக்கவும்.
இதற்குப் பிறகு மைல்டு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு தலைமுடியை நன்றாகக் கழுவவும்.