ஓ.பன்னீர்செல்வம் உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார் என சசிகலா தெரிவித்துள்ளார்.
ஆறுநாள் தஞ்சாவூர் திருச்சி விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்த சசிகலா சென்னை வந்தார் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது கட்சி தொண்டர்கள் வேண்டுதல் வைத்திருந்தார்கள் அவரவர்கள் மாவட்டத்தில் கோவில்களில் வேண்டி இருந்தார்கள் அதன்படி நான் சென்று வந்தேன். சென்ற இடங்களில் பொது மக்களை சந்தித்தேன். செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் அன்போடு பழகுகிறார்கள்.
செய்தியாளர் : மக்களின் அச்சத்தை களையவேண்டும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று ஓ.பி.எஸ் சொல்லியிருக்கிறார் ?
சசிகலா : கடவுளுக்கு தெரிந்த உண்மை அது என்ன மக்களுக்கு தெரிந்துள்ளது., அப்படித்தான் அதை எடுத்துக் கொள்கிறேன்.
செய்தியாளர்: உங்கள் மேல் குற்றச்சாட்டு இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா ?
சசிகலா : நிச்சயமாக, எது உண்மையோ அது காலதாமதமாக வரலாமே தவிர உண்மையை யாரும் மாற்ற முடியாது, திரையிட்டு மறைக்க முடியாது.
செய்தியாளர் : தொடர்ச்சியாக நீங்கள் தொண்டர்களை சந்தித்து வருகிறீர்கள். அதிமுக தலைமையிடம் இருந்து எந்த சமிக்கையும் வரவில்லையே ? அதனால் ஏதும் வருத்தமா?
அதனால் எந்த வருத்தமும் இல்லை, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா தனியாகத்தான் இருந்தார். பின்னர் ஆட்சியை கொண்டு வந்தோம் எனக்கு இதில் முதலிலேயே அனுபவம் இருப்பதால் இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தொண்டர்கள் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆணிவேர். அதிமுக சட்ட திட்டத்திலும் இதுதான் சொல்லப்பட்டுள்ளது. கட்சி தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கும்.
செய்தியாளர் : சசிகலா மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும் அபிமானம் உண்டு என்று ஓபிஎஸ் சொல்லியுள்ளரே ?
சசிகலா : உண்மையை சொல்லி இருக்கிறார் ஓ.பி.எஸ்.
செய்தியாளர் : ஆறுமுகசாமி ஆணையத்தில் உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்து தான் நடந்தது.?
சசிகலா : விசாரணை ஆணையம் ஆரம்பித்தபோது இதில் உண்மை என்ன என்பது தெரிய வேண்டும் என்று பொது மக்களுக்கும் தெரிய வேண்டும் என்ற விஷயம் அதை நடத்த வேண்டும் என்பதை சொல்லி வந்தேன் அது நடந்துள்ளது. அரசியலில் என்னை பிடிக்காதவர்கள் இந்த மாதிரி ஒரு சொல்லை ஆரம்பித்து வைத்திருக்கலாம்.!
செய்தியாளர் : சசிகலாவின் அடுத்த கட்ட அரசியல் பயணம் எப்படி இருக்கப் போகிறது !?
சசிகலா : நீங்கள் எல்லாம் இங்கே தான் இருக்கப் போகிறீர்கள் பாருங்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM