டேராடூன்:
உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக 47 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றபோதிலும், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தான் போட்டியிட்ட கதிமா தொகுதியில் தோல்வியடைந்தார். ஆனாலும், அவர் பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்வர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து புதிய அரசு பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் புஷ்கர் சிங் தாமி முதல்வராக பதவியேற்றார். அவருடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் குர்மித் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புஷ்கர் சிங் தாமி முதல்வராக பதவியில் தொடர வேண்டுமானால், அடுத்த 6 மாதத்திற்குள் எதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.