ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள போராடும் ஐடி நிறுவனங்கள்.. எப்படி சமாளிக்கின்றன?

சர்வதேச அளவில் ஐடி துறையில் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், ஐடி நிறுவனங்கள் பல புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகின்றன. குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் ஐடி துறையில் மிகப்பெரிய சவாலான விஷயமாக அட்ரிஷன் விகிதம் இருந்து வருகின்றது.

எனினும் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் அட்ரிஷன் உச்சத்தில் இருந்த காலம் கடந்துவிட்டது. இது இனி வரும் காலாண்டுகளில் குறையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் ஐடி ரெய்டு .. 25 இடங்களில் அதிரடி சோதனை.!

பணியமர்த்தல் திட்டம்

பணியமர்த்தல் திட்டம்

இதற்கிடையில் இந்திய ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே 2022ம் நிதியாண்டிற்கான பிரெஷ்ஷர்கள் பணியமர்த்தலை அதிகரித்துள்ளன. இது நடப்பு நிதியாண்டில் இன்னும் அதிகமான பணியமர்த்தலை திட்டமிட்டுள்ளன. இது அதிகரித்து வரும் அட்ரிஷன் விகிதத்தினை சமாளிக்க பயன்படும் என்றும் கூறப்படுகின்றது.

டயர் 2 & டயர் 3 நகரங்களில் டெலிவரி சென்டர்கள்

டயர் 2 & டயர் 3 நகரங்களில் டெலிவரி சென்டர்கள்

ஐடி நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள டயர் 2 மற்றும் டயர் 3 அடுக்கு நகரங்களில் தங்களது டெலிவரி சென்டர்களை தொடங்கி வருகின்றன. இது ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும், ஹைபிரிட் ஓர்க் மாடலில் ஊழியர்கள் பணிபுரியவும் பயனுள்ளதாக இருக்கும். மொத்தத்தில் ஊழியர்கள் நீண்டகால நோக்கில் பணிபுரிய காரணமாக அமையும். இதனால் அட்ரிஷன் விகிதமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அதிக சம்பளம்
 

அதிக சம்பளம்

மேலும் தொடர்ந்து அட்ரிஷன் விகிதம் அதிகரித்து வரும் நிலையில், ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டு வருகின்றன. இதற்கிடையில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் விலை உயர்வு பற்றியும் பேசி வருவதாகவும் கூறப்படுகின்றது. மொத்தத்தில் செலவினங்களை கட்டுக்குள் வைக்க நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

அதிக பணியமர்த்தல்

அதிக பணியமர்த்தல்

இதற்கிடையில் வாடிக்கையாளர்களும் நிறுவனங்களுக்கு சாதகமான பதிலை கொடுத்து வருவதாகவும் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. ஐடி தேவையானது தொடர்ந்து வலுவாக இருந்து வருகின்றது. இதனால் ஊழியர்களின் தேவையும் வலுவாக இருந்து வருகின்றது. இதனால் கடந்த ஆண்டினை காட்டிலும் நடப்பு ஆண்டிலும் பணியமர்த்தல் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அதிகளவிலான பணியமர்த்தல் என்பது அட்ரிஷன் விகிதத்தினை சமாளிக்க பயன்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How Indian IT companies are managing employee attrition

How Indian IT companies are managing employee attrition/ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள போராடும் ஐடி நிறுவனங்கள்.. எப்படி சமாளிக்கின்றன?

Story first published: Wednesday, March 23, 2022, 16:17 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.