இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.
கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தையானது சரிவிலேயே முடிவடைந்தது. இது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் மானிட்டரி கொள்கைகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்று கூறியதை அடுத்து சந்தைகள் சரிவினைக் கண்டு முடிவடைந்தன.
எனினும் ஆசிய சந்தைகள் பலவும் இன்று ஏற்றத்திலேயே தொடங்கியுள்ளன. அதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.
பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக 80 பைசா உயர்வு.. மத்திய அரசின் கணக்கு என்ன..?!
கவனிக்க வேண்டிய காரணிகள்
எனினும் உக்ரைன் ரஷ்ய இடையேடான பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டுள்ள நிலையில், மீண்டும் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இரண்டாவது நாளாக எரிபொருள் விலையானது உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 102.12 புள்ளிகள் அதிகரித்து, 58,091.42 புள்ளிகளாகவும், நிஃப்டி 22.70 புள்ளிகள் அதிகரித்து 17,337.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 418.72 புள்ளிகள் அதிகரித்து, 58,408.02 புள்ளிகளாகவும், நிஃப்டி 123.70 புள்ளிகள் அதிகரித்து 17,439.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1475 பங்குகள் ஏற்றத்திலும், 396 பங்குகள் சரிவிலும், 75 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. எனினும் பெரியளவில் ஏற்றம் காணவில்லை. பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீடு மட்டும் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. அதே சமயம் நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ் குறியீடுகள் சிவப்பு நிறத்திலும், மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹிண்டால்கோ, டிவிஸ் லேப், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டெக் மகேந்திரா பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹீரோ மோட்டோகார்ப், பார்தி ஏர்டெல், கோல் இந்தியா, பிரிட்டானியா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், இந்தஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாக உள்ளன. இதே பார்தி ஏர்டெல், மாருதி சுசுகி, கோடக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.டிஎ.ஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது நிலவரம்
தற்போது 10.28 மணி நிலவரப்படி, தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கிய சந்தையானது, தற்போது சென்செக்ஸ் 19.44 புள்ளிகள் குறைந்து, 57,969.86 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 2.7 புள்ளிகள் குறைந்து, 17,312.80 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில் ஏற்ற இறக்கம் தொடரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
opening bell: indices trade struggling amid high volatility
opening bell: indices trade struggling amid high volatility/என்ன தான் நடக்கிறது.. ஏற்ற இறக்கத்தில் சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்?