ஏ.ஆர்.ரஹ்மான் அணிந்த உடை எவ்வளவுக்கு ஏலம் போனது தெரியுமா?

ஏ.ஆர்.ரஹ்மான் 1992 ரோஜாவில் அறிமுகமானது தொடங்கி இந்திய இசைத்துறையில் 30 வருடங்களாக இசைத்துறையில் கொடி கட்டிப் பறப்பவர். தமிழ் மட்டுமல்லாது பல்வேறு இந்திய மொழிகளிலும் இசையமைத்த ரஹ்மானின் இசை மகுடத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக இரட்டை ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. இந்திய இசையை உலகளவில் பிரதிநிதித்துவம் செய்த இசையமைப்பாளர்களில் ரஹ்மானுக்கு எப்போதும் ஒரு இடமுண்டு. அவர் பயன்படுத்திய உடை சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. ஏலம் போன தொகையைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ராஜஸ்தான் காஸ்மோ கிளப் நிறுவப்பட்டு 28-வது ஆண்டு கடந்ததைக் கொண்டாடும் விதமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளமியூசிக் அகாதமியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு கதர் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ஒரு இலட்சம் நன்கொடை வழங்கினார்.

AR Rahman and Ilayaraja

அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்திய உடைகள் ஏலம் விடப்பட்டன. அதில் அதிகபட்ச தொகையாக ஒரு உடை 6.75 இலட்சத்திற்கு ஏலம் போனது. ப்ரமோத் சுரதியா (Pramod Suradia) இதனை வாங்கியுள்ளார். இந்த ஏலத்தில் பெறப்படுகின்ற தொகை, உடை இல்லாத ஏழை மக்களுக்கு உதவ பயன்படுத்தப்படும் என்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைக்கும் பணிகளில் உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.