மும்பை,
ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன
இந்த ஆண்டு லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்ட நிலையில், மும்பையின் வான்கடே ஸ்டேடியம், பிரபோர்ன் ஸ்டேடியம், நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானம் மற்றும் புனேவில் உள்ள கஹுஞ்சே ஸ்டேடியம் ஆகியவற்றில் 74 போட்டிகள் நடைபெற உள்ளன
இந்நிலையில் ஐபிஎல் போட்டியை நேரில் காண 25 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .மேலும் ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டுக்களை ஐபிஎல்- லின் அதிகாரபூர்வ இனையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது