சீனாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்,மோதி விழுவதற்கு முன்பு ஒலியின் வேகத்தில் அதி வேகமாக பயணித்ததாக ஒரு பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய இந்த சி 737-800 விமானத்தில் பயணிகள் உள்பட 133 பேர் இருந்தனர்.
விபத்துக்குள்ளான சமயத்தில் மணிக்கு 700 மைல்கள் என்ற வேகத்தில் இந்த விமானம் பறந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒலியின் வேகமாகும். இந்த வேகத்தில் போய் மோதியதால்தான் விமானம் சுக்கு நூறாக நொறுங்கி எரிந்து சாம்பலாகி விட்டது. இவ்வளவு அதி வேகத்தில் விமானம் விபத்துக்குள்ளாகும்போது விமானத்தில் எந்தப் பொருளும் மிஞ்சாது என்கிறார்கள். குறிப்பாக முக்கியமான தகவல்கள் கூட கிடைக்காமல் அழிந்து விடும் அபாயம் உள்ளது.
“ஹைபர்சானிக்”கை கையில் எடுத்த ரஷ்யா.. அதிர்ச்சியில் அமெரிக்கா.. புடின் செம கேம்!
விபத்தில் சிக்கிய விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்தபோதுதான் திடீரென கீழ் நோக்கி பாய்ந்து வந்துள்ளது. ஒன்றரை நிமிடத்தில் விபத்து நேரிட்டு விட்டது. விபத்துக்குள்ளான விமானமானது குன்மிங் என்ற நகரிலிருந்து குவாங்ஸூ நகருக்கு போய்க் கொண்டிருந்தது. தெற்கு சீனாவில் உள்ள குவாங்ஸி மாகாணத்தின் மீது பறந்தபோது விமானம் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. வானிலிருந்து கீழ் நோக்கி செங்குத்தாக வந்து விழுந்து சிதறிப் போனது.
விமானம் விழுந்து தீப்பிடித்ததில் அப்பகுதியில் பெரும் காட்டுத் தீவிபத்தும் ஏற்பட்டு விட்டது. விமானம் செங்குத்தாக வந்து விழுந்து விபத்துக்குள்ளான கோரக் காட்சிகள் அடங்கிய வீடியோவும் உலகம் முழுவதும் வைரலானது. விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.