கட்டாய மத மாற்ற தடை சட்டத்திற்கு ஹரியானா சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இச்சட்டப்படி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்த பட்சம் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படுவதை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன. உத்தரப் பிரதேசம், இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் அண்மையில் கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது
இதையும் படிக்கலாம்: “2023ஆம் ஆண்டிற்குள் யமுனா நதி தூய்மைபடுத்தப்படும்”- உறுதியளித்த டெல்லி அமைச்சர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM