புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிதி ஒதுக்க மசோதா மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அதற்கு மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டு ஆட்சியின்போது எந்த விதமான ராணுவ தளவாடங்களும் வாங்கப்படவில்லை. நாங்கள் 2014-ல் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் அனைத்துக் கருவிகளையும் வாங்கினோம்.
நாங்கள் வந்த பிறகு ராணுவ வீரர்களுக்கு துப்பாக்கிகள், குண்டு துளைக்காத ஆடைகள், துப்பாக்கிக் குண்டுகள், ரைபிள்கள், ஏன்போர் விமானங்கள் கூட வாங்கினோம். 10 ஆண்டுகால பாதுகாப்புத் துறை வரலாற்றில் ராணுவத்தளவாட கொள்முதல் என்பது பூஜ்யமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நான் சொல்ல விரும் புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
– பிடிஐ