சர்வகட்சி மாநாடு இன்று (23) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடவும் ஆலோசனைகளை முன்வைக்கவும் இந்த சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா மகஜன கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, லங்கா சமசமாஜ கட்சியின் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அபே ஜனபல கட்சியின் வண. அத்துரலியே ரதன தேரர், 11 பங்காளிக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை அமைப்பு, இலங்கை தமிழ் அரசு ஆகிய கட்சிகள் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றன.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
23.03.2022