சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த ஆம்ஆத்மி கவுன்சிலர்| Dinamalar

புதுடில்லி: டில்லியில் ஆம்ஆத்மி கவுன்சிலர் ஒருவர் சாக்கடை தொட்டியில் இறங்கி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துள்ள வீடியோ வைரலானது.

டில்லியில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் ஆம்ஆத்மி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களின் கவனம் ஈர்ப்பதற்காக தேர்தல் நேரத்தில் பலரும் விதவிதமான செயல்களை ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், கிழக்கு டில்லியை சேர்ந்த ஆம்ஆத்மி கவுன்சிலர் ஹசீப்-உல்-ஹசன் என்பவர், அப்பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்காவில் நிரம்பி வழியும் சாக்கடை தொட்டியில் இறங்கி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவியது.

இதனால் அசுத்தம் அடைந்த அவருக்கு ஆம்ஆத்மி கட்சி தொண்டர்கள் ஹசீப்-உல்-ஹசன் மீது பால் ஊற்றி குளிப்பாட்டினர். இது தொடர்பாக ஹசீப் கூறுகையில், ‛கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி வழிகிறது என அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பா.ஜ., கவுன்சிலரும், பா.ஜ., எம்எல்ஏ.,வும் உதவி செய்யவில்லை. ஆகவே, நானே இறங்கி வேலை செய்தேன்’ என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.