‘சின்னம்மா’ என உருகிய ஓ.பி.எஸ்: 4 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த மாற்றம்

பிப்ரவரி, 2017-இல் ஓ.பி.எஸ் பதவி விலகிய பிறகு, அதிமுகவின் முன்னாள் இடைக்காலத் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவைப் பற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு எப்போதும் சின்னம்மா மீது மரியாதையும் உண்டு என்று உருக்கமாக முதல்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வி.கே.சசிகலா அல்லது அவரது குடும்பத்தினர் சதி செய்யவில்லை என்ற மூத்த தலைவர்களின் வாக்குமூலம் சரியானது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் செவ்வாய்க்கிழமை விசாரணை ஆணையத்தின் முன் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “தனிப்பட்ட முறையில் எனக்கு சின்னம்மா (சசிகலா) மீது மதிப்பும் மரியாதையும் உண்டு இருப்பதாக கூறினார். இதன் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த சசிகலாவைப் பற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குறைந்தபட்சம் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ‘சின்னம்மா’ என்று மீண்டும் பொதுவெளியில் பேசியுள்ளார். பிப்ரவரி, 2017-இல் ஓ.பி.எஸ் பதவி விலகிய பிறகு, அதிமுக முன்னாள் இடைக்காலப் பொதுச் செயலாளரைப் பற்றி வெளிப்படையாகத் பேசுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 5, 2016-ல் மரணம் அடைந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், குறுக்கு விசாரணையின்போது, ​​சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், அதிமுக ஒருங்கிணைப்பாலர் ஓ. பன்னீர்செல்வத்திடம், 8 ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் உயர் அதிகாரிகள் ‘சதி’ செய்ததாக புகார் அளித்துள்ளனர்.

2010-11 அல்லது அதற்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ சதி செய்யவில்லை என்றும், அது தொடர்பான தகவல் போலீஸாரிடம் இல்லை என்பதும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதை வழக்கறிஞர் சுட்டிக்காட்டியபோது, ​​அதிகாரிகளின் வாக்குமூலம் சரிதான் என்று பன்னீர்செல்வம் கூறினார்.

சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், சசிகலாவை இன்னும் தனிப்பட்ட அளவில் மதிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, தனிப்பட்ட முறையில் அவர் மீது மதிப்பும் மரியாதையும் இருப்பதாக பன்னீர்செல்வம் பதிலளித்தார். மேலும், ஒரு கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார். பொதுமக்களின் கருத்தை கருத்தில் கொண்டு, அவரது மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓ.பி.எஸ் கூறினார்.

ஒரு கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தாம் அழுததாகக் கூறினார். அப்போது, ஜெயலலிதா, ​​‘பன்னீர் அழாமல் தைரியமாக இருங்கள்’ என்று கூறியதாக தெரிவித்தார்.

அப்பல்லோ மருத்துவமனையின் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தபோது, ​​ஓபிஎஸ், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தனக்கு திருப்தியாக இருந்தது என்று தெரிவித்தார். மருத்துவ சிகிச்சை தொடர்பான கேள்விகளுக்கு பன்னீர்செல்வம் பதில் கூறுவதற்கு மருத்துவமனை வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

விசாரணை ஆணையத்தில் விசாரணையின்போது, நண்பகலில், ஆணையத்தின் தட்டச்சு செய்பவர் மயங்கி விழுந்த சத்தம் கேட்டதால், சிறிது நேரம் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவரை ஓய்வெடுப்பதற்காக அருகில் உள்ள அறைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்த ஓ.பி.எஸ் விசாரணை நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “கேட்ட கேள்விகளுக்கு நான் சரியான, உண்மையான பதில்களை அளித்துள்ளேன்” என்று கூறினார்.

அதிமுகவில் சசிகலா நுழைவதற்கு ஓபிஎஸ் ஆதரவாக இருப்பதாகக் கருதப்படும் நிலையில், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமீபத்தில், ஓ.பி.எஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு முன்னதாக சசிகலாவை கட்சியில் மீண்டும் சேர்க்க அக்கட்சியின் தேனி பிரிவு களமிறங்கியது.

சசிகலா மீதான மதிப்பும் மரியாதையும் தனிப்பட்ட அளவில் இருப்பதாக ஓபிஎஸ் கூறியிருந்தாலும், இது கட்சியில் மேலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை என 2 நாட்கள் ஆஜரான ஓ.பன்னீர்செல்வம், ஆணையம் மற்றும் குறுக்கு விசாரணையில் 145க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். செவ்வாய்க்கிழமை விசாரணை சுமார் 5 மணி நேரம் நீடித்தது, காலையில் ஒரு அமர்வும் பிற்பகலில் மற்றொரு அமர்வும் விசாரணை நடந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.