சிறையில் தோழியை திருமணம் செய்து கொண்டார் விக்கிலீக்ஸ் அசாஞ்ச்| Dinamalar

லண்டன்: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், தனது தோழியை சிறையில் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்ச் 51, இவர் அமெரிக்க பாதுகாப்புத்துறை, சி.ஐ,ஏ குறித்த ரகசிய தகவல்களை விக்கிலீக்ஸ் என்ற இணையதள பத்திரிக்கை மூலம் அம்பலப்படுத்தியது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் மீது அமெரிக்கா, பல்வேறு பாலியல் வழக்குகளை பதிவு செய்தது. லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் 7 ஆண்டுகள் தங்கி இருந்தார். 2019 ஆம் ஆண்டு பிரிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு, லண்டன் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது நீண்ட நாள் தோழியும் வழக்கறிஞருமான ஸ்டெல்லா மோரிசை சிறையில் திருமணம் செய்து கொண்டார். முன்னதாக 1989ம் ஆண்டு தெரசா என்பவரை திருமணம் செய்து 1999ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இந்த நிலையில் ஸ்டெல்லா மோரிசை 2 வது திருமணம் செய்துகொண்டார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.