பெய்ஜிங்: சீனாவின் குன்மிங் நகரிலிருந்து ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737-800 ரக பயணிகள் விமானம் நேற்று முன்தினம் குவாங்சூ நகருக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், ஊஸூ நகரை ஒட்டிய வனப்பரப்பில் விழுந்து நொறுங்கியது. இதில் ஊழியர்கள் உட்பட 132 பேர் இருந்தனர். இதையடுத்து, மீட்புக் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டது.
இரண்டாவது நாளாக நேற்றும் மீட்புப் பணி நடைபெற்றது. அப்போது விமானத்தின் சில பாகங்களை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், இதுவரை ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை என சீன அரசு ஊடகமான சிசிடிவி தெரிவித்துள்ளது. விபத்தின்போது விமானம் தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் தீயில் கருகியிருக்கலாம் என கூறப்படு கிறது. சம்பவ இடத்தில் இருந்து பர்ஸ், அடையாள அட்டை உள்ளிட்டவை எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மீட்புக் குழுவினர் விமானத் தின் கருப்பு பெட்டியை தேடி வருகின்றனர். அதைக் கண்டெடுத்தால்தான் விபத்துக்கான காரணம்தெரியவரும்.