அரச தகவல் நிலையம் பொது மக்களுக்கு அரச நிறுவகங்களின் தகவல்களை வழங்கும் 24 மணித்தியாலங்கள் செயல்படும் விரிவுபடுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக இதுவரையில் இருந்த 1919 துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அரச தகவல்களை வழங்குவதற்கு மேலதிகமாக உடனடி தகவல் சேவை ( Instant messenger ) வெப் விட்ஜெட் வசதி ( web widgets ) முகநூல் மற்றும் மின்னஞ்சல் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக தொடர்ச்சியாக சேவைகள் வழங்கப்படுகின்றன.
வெளிநாட்டில் இருந்து தகவல்களை கேட்டறிவதற்கு 011 41 91 919 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்புகொள்ள முடியும். சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக முன்னணி பிரதிநிதிக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த அரச தகவல் மத்திய நிலையத்தை ( GIC 1919) செயற்படுத்துதல் மற்றும் முகாமைத்துவம் செய்வதற்கு டயலொக் (Dialog network (PVT) LTD) என்ற நிறுவனத்துக்கும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு சமீபத்தில் இடம்பெற்றது.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் ஓசத சேனநாயக்க ( ICTA ) மற்றும் Dialog Axiata PLC நிறுவன குழுமத்தின் பிரதான நிலைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் சைச்சாத்திட்டனர்.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த அரச தகவல் மத்திய நிலையம் ( GIC 1919) ஆரம்பிக்கப்பட்டது. அரச தகவல் மற்றும் பொது மக்கள் சேவைகள் தொடர்பாக சரியான தகவல்களை பொதுமக்களுக்கு இலகுவாக வழங்குவதற்காக இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு அமைவாக வருடாந்தம் சுமார் 1.8 மில்லியன் மக்கள் இந்த சேவையின் மூலம் அரச தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட 300 அரச நிறுவகங்களுக்கும் மேற்பட்டவற்றின் தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகின்றது. தகவல் வழங்கும் சேவையை மேம்படுத்துவதன் மூலம் ,அரச சேவையை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பான தகவல், உதவி கரும பீடம் போன்று அதற்காக இலகுவாக பிரவேசிக்கக்கூடிய தொடர்புகளைப்போன்று தகவல்களை வழங்கும் பணியும்
பயிற்சி பெற்ற பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. மேம்படுத்தப்பட்ட அரச தகவல் நிலையத்தின் மூலம் தொலைபேசி, கையடக்க தொலைபேசி, சமூக ஊடகம் இணையத்தளங்கள் உள்ளிட்டவை மற்றும் டிஜிட்டல் துணையுடனான அலைவரிசை ஊடாக பிரஜைகளுக்கு இலகுவாக தடைகள் இன்றி சேவைகள் வழங்கப்படுகின்றன.
கீழ் கண்ட தகவல்களில் பிரவேசிக்க முடியும்.
சர்வதேச அழைப்புகள் 94 114 19 1919
இணைய உரையாடல் வெப் செட் : www.gic.gov.lk
தொலைபேசி : 1919
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
சமூக ஊடகம் :
Facebook – https://www.facebook.com/GovInfo1919
Twitter – https://twitter.com/gic1919
LinedIn – https://www.linkedin.com/in/gic1919/
YouTube – https://www.youtube.com/user/gic1919