ஜேர்மனியில், ரஷ்ய இளைஞர் ஒருவர் உக்ரைன் நாட்டவர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
Euskirchen நகரில், ரஷ்ய மொழி பேசும் 16 வயது இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறி, ஒரு பெண் அழும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று கூறியுள்ள North Rhine-Westphalia பொலிசார், அது போலியான ஒரு வீடியோ என்று கூறியுள்ளார்கள்.
உக்ரைனியர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே பரப்பட்ட போலியான தகவல் அது என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த விடயம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ள அதிகாரிகள், அந்த வீடியோவைப் பகிரவேண்டாம் என மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
Das ist Dame die es erzählt , der Telegramkanal heißt “Neues aus Russland ” pic.twitter.com/Mp2tGHaNmX
— V-VRAU (@fckafdqd2022) March 20, 2022