காரைக்கால்: தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்காக 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தது. காரீப் பருவத்திற்காக ஓமனில் இருந்து வந்த யூரியாவின் தரத்தை நாகை ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார். 15 நாளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் 22,000 மெட்ரிக் டன் யூரியாவை கொண்டு செல்ல ஆணையிடப்பட்டுள்ளது.