தரமான சம்பவம்.. இதுவரை இல்லாத அளவுக்கு $400 பில்லியன் ஏற்றுமதி.. பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவில் கொரோனாவினால் சரியத் தொடங்கிய பொருளாதாரம், மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி கொண்டுள்ளது என்பதற்கு இந்த பதிவே சரியான உதாரணம்.

இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றில் முதல் முறையாக 400 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதியினை செய்து சாதனை படைத்துள்ளது.

இது குறித்து கருத்து பிரதமர் மோடி, 400 பில்லியன் என்ற ஏற்றுமதி இலக்கினை இந்தியா முதன் முறையாக எட்டி சாதனை படைத்துள்ளது.

சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட் தான்..!

முக்கிய மைல்கள்

முக்கிய மைல்கள்

இந்த இலக்கினை எட்ட காரணமாக இருந்த விவசாயிகள், நெசவாளர்கள், எம்.எஸ்.எம்.இ-க்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

இந்தியா சாதனை

இந்தியா சாதனை

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 2020 – 21ம் ஆண்டில் 292 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 37% அதிகரித்து 400 பில்லியன் டாலர் இலக்கினை எட்டியுள்ளது. இன்னும் நடப்பு நிதியாண்டு முடிவடைய சில தினங்கள் உள்ள நிலையில் இந்த இலக்கினை எட்டி இந்தியா சாதனை படைத்துள்ளது.

சராசரி ஏற்றுமதி
 

சராசரி ஏற்றுமதி

சராசரியாக ஏற்றுமதியானது ஒரு நாளைக்கு 1 பில்லியன் டாலர் மதிப்பிலும், ஒவ்வொரு மாதமும் 33 பில்லியன் டாலர் மப்பிலும், ஒரு மணி நேரத்திற்கு 46 மில்லியன் டாலர் ஏற்றுமதியினையும் இந்தியா செய்து வருகின்றது. மொத்தத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றில் முதல் முறையாக 400 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதியினை செய்து சாதனை படைத்துள்ளது.

நம்பிக்கை

நம்பிக்கை

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், மார்ச் 14 வரையிலான காலத்தில், இந்தியாவின் ஏற்றுமதியானது 390 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இது மார்ச் 31, 202க்குள் நிச்சயம் 400 பில்லியன் டாலர்களை எட்டும் என கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

v

v

முன்னதாக பிப்ரவரியில் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 2022 வரையிலான காலத்தில், இந்தியாவின் ஏற்றுமதி 300 பில்லியன் டாலராக இருந்தது. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் மட்டும், தனியாக 37 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாதத்தில் 15 நாட்களில் மட்டும் 16 பில்லியன் டாலர்களை எட்டியதாகவும் கூறியிருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India reach $400 billion goods export target ahead of schedule: PM modi

India reach $400 billion goods export target ahead of schedule: PM modi/தரமான சம்பவம்.. இதுவரை இல்லாத அளவுக்கு $400 பில்லியன் ஏற்றுமதி.. பிரதமர் மோடி பெருமிதம்!

Story first published: Wednesday, March 23, 2022, 14:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.