தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெருவாரியான இடத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் மாநகராட்சி தலைவர் துணைத்தலைவர் பதவிகளை திமுக, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக வேட்பாளர்கள் நின்று வெற்றி பெற்றனர்.
இதையடுத்து. திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தினார். ஆனால் ஒரு சில வேட்பாளர்கள் ராஜினாமா செய்யாமல் உள்ளனர். ஆகையால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வருகின்றனர்.
உடுமலை நகராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட திமுக நகர செயலாளர் மத்தீன் கட்சியின் நகரச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் உடுமலை நகர செயலாளர் மத்தீன் கட்சியின் நகரச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.