நியூசிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று தொடங்கியது முதலே கடுமையான ஊரடங்கு விதிகளின் மூலம் தொற்று எண்ணிக்கையை நியூசிலாந்து அரசு கட்டுப்படுத்தி வந்ததது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.
நியூசிலாந்தில் மொத்தமாக 1 லட்சத்து 19 ஆயிரத்து 766 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியை பொருத்தவரை, 95.1 சதவீதம் பேர் 2 டோஸ் போட்டுக்கொண்டுள்ளதாகவும், 72.8 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.