டாகா: வங்கதேசத்தில் சுற்றுலாப் படகின் மீது கப்பல் ஒன்று மோதி மூழ்கடித்ததால் 5 பேர் பலியான துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வங்கதேச தலைநகர் டாகாவிற்கு அருகிலுள்ள ஷிடாலக்ஷ்யா நதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுற்றுலாப் படகு கிளம்பியது. ஏராளமான பயணிகள் அப்படகில் பயணித்ததாக கூறப்படுகிறது. திடீரென சுற்றுலாப் படகின்மீது ருபோஷி-9 எனும் சரக்குக் கப்பல் மோதியது. படகில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து உயிரை காப்பாற்ற சிலர் தண்ணீரில் குதித்தனர். ஆனால் அனைவரும் குதித்து தப்பிக்கும்முன், வேகத்தை கட்டுப்படுத்த முடியாத சரக்குக் கப்பல், படகை மூழ்கடித்துவிட்டது.
இதனை அருகில் சென்ற மற்றொரு கப்பலில் பயணித்த சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த விபத்தில் படகில் பயணித்த ஒரு ஆண், 3 பெண்கள், ஒரு குழந்தை என 5 உயிரிழந்தனர். 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணிகள் நடைபெறுகிறது. சுற்றுலா படகின் மீது கப்பல் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டாகா: வங்கதேசத்தில் சுற்றுலாப் படகின் மீது கப்பல் ஒன்று மோதி மூழ்கடித்ததால் 5 பேர் பலியான துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.வங்கதேச தலைநகர் டாகாவிற்கு அருகிலுள்ள ஷிடாலக்ஷ்யா நதியில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.