இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. இம்ரான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், மார்ச் 28ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஆனால் இதற்கு முன்னதாகவே இம்ரான் பதவியை விட்டு விலகலாம் என நம்பப்படுகிறது. ராணுவத் தளபதி அவரைபதவி விலகுமாறு கேட்டுக் கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் இருந்து மற்றொரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.
இம்ரான் கானின் நெருங்கிய நண்பர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இம்ரான் கானின் முன்னாள் ஆலோசகர் ஷாஜாத் அக்பர், தலைமைச் செயலாளர் அசம் கான் மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமது ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறினர். ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, தங்களுக்கு பிரச்சனை அதிகரிக்கலாம் என்பதால், இம்ரானுக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து தப்பி வெளியேற நினைக்கின்றனர்.
இம்ரானின் ஆலோசகர் ஷாஜாத் அக்பர்
ஷாஜாத் அக்பர், ஊழல் மற்றும் உள் விவகாரங்களில் இம்ரானின் ஆலோசகராக இருந்தார். நவாஸ் ஷெரீப் குடும்பத்திற்கு நெருக்கடி கொடுக்க இம்ரான் அவரை பணியில் அமர்த்தினார். ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்பும் அவரது குடும்பத்தினரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் விரும்பினார். அக்பர் ஷெரீப் குடும்பத்தினரை குற்றவாளிகள் என நிரூபிக்க அனைத்து விதமான முயற்சியையும் மேற்கொண்டார். ஆனால் ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.
மேலும் படிக்க | இந்தியா-பாக் போரில் இந்தியாவை சுற்றி வளைத்த உலக நாடுகள்; நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!
ஜனவரியில் திடீரென அக்பர் ராஜினாமா செய்தி வந்தது அதன் பிறகு அவரைக் காணவில்லை. தற்போது அவர் குடும்பத்துடன் லண்டனில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, ஷெரீப் குடும்பம் தன்னைப் பழிவாங்கக்கூடும் என்று அக்பர் அஞ்சுகிறார் என்பதால், லண்டனுக்கு தப்பி ஓடி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் தீ விபத்து! சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ
தலைமைச் செயலாளர் அசாம் கான்
தலைமைச் செயலாளர் அசாம் கானைப் பற்றி கூறுகையில், அசாமின் உத்தரவின் பேரில், பல முக்கிய பத்திரிகையாளர்களும் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் ஹமீத் மிர், சலீம் சஃபி, அசாத் அலி டூர், அலியா ஷா, ரிஸ்வான் ராஸி மற்றும் அர்சூ காஸ்மி போன்ற பத்திரிகையாளர்களும் அடங்குவர். இப்போது இந்த ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் புதைகுழி தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் மௌலானா ஃபசல்-உர்-ரஹ்மானும் ஆசாம் நாட்டை அழித்துவிட்டார் என்று கூறியுள்ளார். எனவே இம்ரானின் பதவி பறி போன பின், தனக்கு பெரும் பிரச்சனைகள் வரும் என்பதால், கடந்த வெள்ளிக்கிழமை துபாய் சென்றடைந்த அவர், அங்கிருந்து தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார்.
முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமது
பாகிஸ்தான் முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமது ஒருபுறம், இம்ரான் அரசாங்கத்தை அவர் கடுமையாகக் கண்டித்ததோடு, அரசாங்கத்தை நடத்துவதற்கான வழிகள் குறித்தும் கேள்விகளை எழுப்பினார் என்றாலும் இராணுவத்தின் விருப்பத்திற்கு மாறாக பல முடிவுகளையும் எடுத்தார். அரசின் ஊழல் தொடர்பான பல வழக்குகளில் தீர்ப்பை அகமது நிலுவையில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கும்சார் ஜனவரி மாதம் ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில், குல்சாரின் குடும்பம் ஏற்கனவே அமெரிக்கா சென்று விட்டது. அவரும் இந்த மாத தொடக்கத்தில் நாட்டை விட்டு வெளியேறினார்.
மேலும் படிக்க | Pakistan: குரானை அவமதித்ததாக இளைஞர் ஒருவர் கல்லால் அடித்து படுகொலை!