பாரதி கண்ணம்மாவில் மீண்டும் நடிப்பேனா? கண்மணி மனோகரன் ஸ்பெஷல் பேட்டி

Tamil Serial Actress Kanmani Manoharan Interview : தற்போதைய காலகட்டத்தில் சினிமா நட்சத்திரங்களை விட சின்னத்திரை சீரியல் நட்சத்திரங்களுக்கே இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் லாக்டவுன் காலத்தில் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடந்த போது சீரியலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுமே மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்துள்ளது. தற்போது லாக்டவுன் முடிந்து இயல்புநிலைக்கு திரும்பினாலும், சீரியலுக்கு உண்டான வரவேற்பு குறையாமல்தான் உள்ளது.

இந்த நிலையை பயன்படுத்திக்கொள்ளும் தொலைக்காட்சிகள் அவ்வப்போது புதிய சீரியலையும் களமிறங்கி வருகின்றனர். அதேபோல் சீரியல்களில் பல புதுமுக நடிகர் நடிகைகளும், அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் சேர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில், அறிமுகமாகி தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் கண்மணி மனோகரன் (ஸ்வீட்டி).

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் முதன்மை கேரக்டரான கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பெற்றவர்தான் கண்மணி மனோகரன். தொடக்கத்தில் கண்ணம்மாவுக்கு எதிரான வில்லத்தனம் செய்யும் கேரக்டரில் அறிமுகமான இவர், அதன்பிறகு திருந்தி நல்லவராக தனது அக்கா கண்ணம்மாவுக்கு உதவும் கேரக்டரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் கண்மணி மனோகரன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் மற்றொரு பிராஜக்டில் சந்திப்போம் என்று கண்மணி அப்போது தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழில் அமுதாவும்…….? என்ற சீரியலில் முதன்மை கேரக்டரில் நடிக்க உள்ளர். இந்த சீரியலின் ப்ரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதோடு மட்டுமல்லாமல் ஜீ தமிழில் சூப்பர் குயின் என்ற ரியாலிட்டி ஷோவில் தனது அம்மாவுடன் பங்கேற்று வருகிறார். நன்றாக சென்றுகொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியது, ஜீதமிழ் சீரியலில் முதன்மை கேரக்டர், அம்மாவுடன் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்வது குறித்து கேட்பதற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பாக கண்மணி மனோகரனை தொடர்புகொண்டோம்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள் :

சிறுவயதில் இருந்தே நடிப்புதான் உங்களது ஆசையாக இருந்ததா?

சிறுவயதில் நடிக்க வேண்டும் என்று ஆசை கிடையாது. சின்ன வயசுல இருந்து ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் ஒரு ஒரு ஆசை இருந்தது. காண்பிடன்டா இதுதான் ஆக வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் இப்போது நல்ல கேரக்டர் பண்ணும் ஆசை இருக்கு.

பாரதி கண்ணம்மா சீரியல் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

மாடலிங்காக ட்ரை பண்ணிட்டு இருக்கும்போது, ஆக்டிங் பண்றதுக்காக ஆடிஷனுக்கு வரசொன்னாங்க. அதன்பிறகு பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் சாரை சந்தித்து ஆடிஷனில் சலைக்ட் ஆகிவிட்டேன். அந்த சீரியலில் நெகடீவ் ரோல் பண்ணும்போது நெகடீவ் பாசிட்டீவ் என்றல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் முதல்முறை அப்படி நடிக்கும்போது இன்ஸ்ட்ரஸ்டிங்கா இருந்தது. ஆக்டீங் எனக்கு புதுசு அதிலும் நெகடீவ் ரோல்னு வரும்போது நிறைய விஷயங்கள் கத்துக்கிற மாதிரி இருந்தது.

பாரதி கண்ணம்மா சீரியல் மாமியார் ரூபாஸ்ரீ குறித்து…

அவரிடம் ரொம்ப க்ளோசா இருந்தது கிடையாது. எங்களுக்குள் அப்படி ஒரு சான்சும் கிடைக்கவில்லை. அந்த சீரியலில் நடித்த அனைவருமே ஒரே வயதுடையவர்கள் என்பதால் அவர்களுடனே அதிக நேரம் இருந்துள்ளேன். அதனால் அவர் மீது மரியாதை அதிகமாக இருக்கிறது. ஆனால் நெருங்கி பழக முடியவில்லை.

அதுசமயம் ரோஷ்னியுடன் நெருங்கிய பழக்கம் உண்டு. சிஸ்டர் ப்ரண்டு என எப்படி எடுத்துக்கொண்டாலும் நாங்கள் ஒன்றாகத்தான் இருப்போம். செட்டில் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்போம், எங்களுடன் ப்ரீனா, காவிய எல்லோருமே ஒன்னாதான் இருப்போம். ஸ்பெஷலா ரோஷ்னி கூட பழக்க அதிக நேரம் இருக்குறதுக்கான வாய்ப்பு கிடைத்தது.

நெருங்கிய தோழி ரோஷ்னி எதிர்த்து வசனம் பேசும்போது…

செட்டில் ரோஷ்னியை எதிர்த்து டைலாக் பேசும்போது சிரிப்பாதான் இருக்கும். டைலாக் சொல்லும்போதே சிரிச்சிடுவோம். உன் முகத்தை பார்த்தாலே டைலாக் பேச கஷ்டமாக இருக்கே என்று சொல்வேன். ரோஷ்னியை பார்த்து சீரியஸா பண்றது ரொம்ப கஷ்டம். ஆனால் ஆக்டிங் பண்ணித்தான் ஆக வேண்டும் என்று வரும்போது கஷ்டப்பட்டு பண்ணிருக்கேன். இதில் பலமுறை சிரித்து பேசும்போது டைரக்டரிடம் சொல்லிவிட்டு சகஜமானவுடன் திரும்பவும் டேக் போவோம்.

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியது குறித்து…

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷ்னி ஏன் விலகினார் என்பது தெரியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். நான் ரொம்ப நாளைக்கு முன்பே சீரியலில் இருந்து விலகவேண்டியது. ஆனால் இந்த சீரியலை முடித்துவிட வேண்டும் என்று நினைத்து அதில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஆனால் என் நடிப்புத்திறமையை வெளிப்படுத்துவதற்காக வாய்ப்பு பாரதி கண்ணம்மா சீரியலில் குறைவாக இருந்தது. அடுத்து ஏதாவது பண்ண வேணடும் என்பதால் அதில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஜீதமிழ் சீரியல் பற்றி…

இந்த சீரியலில் ஒரு ஜாலியாக கேரக்டர் தான். சிறு வயதில் படிப்பு உள்ளிட்ட சில விஷயங்களை தவறவிட்ட ஒருவர், படித்த ஒருவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஒரு பெண். ரொம்ப ஜாலிய போல்டா இருக்கற ஒரு பொண்ணு

மீண்டும் விஜய் டிவிக்கு வருவீர்களா?

ஒரு நேரத்தில் இரண்டு பிராஜக்ட் செய்வது கஷ்டமானது. ஜீ தமிழ் ப்ராஜக்ட் இப்போதான் ஸ்டார்ட் ஆகிருக்கு. நல்லபடியா போகும்னு நினைக்கிறேன். அதேபோல் விஜய் டிவிக்கு சீரியல் பண்ண மாட்டேன் அப்படியெல்லம் கிடையாது. இந்த சீரியலுக்கு அப்புறம் ஒரு நல்ல கேரக்டர் ரோல் கிடைத்தால் கண்டிப்பா விஜய் டிவிக்காக சீரியல் பண்ணுவேன். பாரதி கண்ணம்மா சீரியல் புரொடக்ஷன்ல கூட திரும்பவும் சேரலாம். எல்லாமே ப்ராஜக்ட் பொறுத்துதான். மற்றபடி தனிப்பட்ட முறையில் யாருடனும் எந்த பிரச்சினையும் இல்லை.

சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோ…

இந்த ஷோ இப்போது சூப்பரா போய்கிட்டு இருக்கு. ஸ்டார்டிங்கில் எனக்கு பெருசா ஒன்னும் தெரியல. ஒரு ஷோ இப்படித்தான் இருக்கும்னு நினைக்கல. ஆனால் போக போக நிறைய விஷயங்கள் ரொம்ப இன்ட்ஸ்ரடிங்கா இருந்துச்சு வராத விஷயங்கள் எல்லாம் ட்ரை பண்ற மாதிரி இருந்துச்சு. ஒவ்வொரு விஷயம் கொடுக்கும்போதும் புதுசா ஏதோ தெரிந்துகொண்டது போல இருந்துச்சு. ஸ்டார்ட்டிங்கை விட இப்போ இந்த ஷோ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

சூப்பர் குயின் ப்ரமோ…

சூப்பர் குயின் ப்ரமோவில் தனது அப்பா மற்றும் சொந்தக்காரர்கள் குறித்து பேசிய கண்மணி, தனது அப்பாவுக்கு ஹார்ட்அட்டாக் வந்தபோது, சொந்தக்காரர்கள் தங்களை அவர்கள் வீட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது தங்களது வீட்டுக்கு ஒருமுறை வந்துவிட்டு செல்லும்படி கூறுகிறார்கள் என்று சொல்லியிருந்தார். அதுபற்றி பேசிய அவர், சிறு வயதில் இருந்தே அவர்கள் மத்தியில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் மனிதர்கள் எப்போதுமே சூழ்நிலைக்கு தகுந்தார்போல் மாறிக்கொண்வார்கள்.

ஆனால் அதற்கு நாம் இடம் கொடுக்க கூடாது எப்போதுமே அடுத்தவர்களை நம்பி நாம் இருக்க கூடாது. இந்த மாதிரியான நிகழ்வுகளை பார்த்து தான் முடிவுகளை சொந்தமாக எடுக்க வேண்டும் என்று தெரிந்துகொண்டேன். மற்றபடி அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. ஒரு விஷயத்தை நான் கற்றுக்கொள்வதற்கு அவர்கள் உதவியிருக்கிறார்கள். அனைவரும் சுயநலமாகத்தான் இருப்பார்கள் என்பதை நான் தெரிந்துகொண்டேன்.

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி குறித்து…

கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தப்பான ஆட்களுக்காக ஒருபோதும் வேலை செய்யாதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து தற்போது பேசியுள்ள அவர், இந்த பதிவிற்கு காரணம் நிறைய உள்ளது. நம்மை மதிக்கும் ஒரு இடத்தில் வேலை செய்தால் தான் ஒரு திருப்தி நமக்கு கிடைக்கும். ஆனால் நம்மை மதிக்கவில்லை என்றால் இவ்வளவு செய்ததும் வேஸ்டா என்று நினைக்க தோன்றும்.

அந்த மாதிரியான உணர்வு எனக்கு வந்தது. ஆனால் இது ஒரு டீம் பற்றியோ அல்லது வேறு எதைப்பற்றியோ இந்த பதிவு அல்ல. இது ஒரு தனி நபரை பற்றிய பதிவு. அதைப்பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை. மரியாதை இருக்கும் இடத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாக கடின உழைப்பை கொடுத்திருந்தால், இன்னும் கொஞ்சம் நல்ல விஷயங்களை செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.