பாலியல் வன்கொடுமையை கணவன் செய்தாலும் அது வன்கொடுமையே என்று தெரிவித்துள்ள கர்நாடக உயர்நீதிமன்றம் அச்செயலில் ஈடுபட்ட கணவன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது
தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கணவன் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கு இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனைவி மீது பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தியது கண்வனாகவே இருந்தாலும், அது பாலியல் வன்கொடுமை குற்றமாகவே கருதப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். திருமணம் என்பது ஆண்களுக்கு மிருகத்தை கட்டவிழ்த்துவிடுவதற்கான எந்த சிறப்பு உரிமையையும் வழங்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விசித்திரமான வழக்கில் புகார்தாரர் தனது மனைவிக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்து உள்ளார் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியது.
“ஒரு மனிதன் ஒரு மனிதன்; ஒரு செயல் ஒரு செயல்; பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பாலியல் வன்கொடுமையே! அது ஒரு “கணவன்” “மனைவி” மீது நிகழ்த்தினாலும் அது பாலியல் வன்கொடுமையே” என்று தெரிவித்த நீதிபதிகள் கணவன் மீதான பாலியல் குற்றச்சாட்டை உறுதி செய்து “பாலியல் வன்கொடுமை” பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர். மேலும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு கணவனின் மீதிருந்து நீக்கப்பட்டால், மனுதாரரின் சரீர இச்சைகளுக்கு பிரீமியம் செலுத்துவதாக அமைந்துவிடும் என நீதிபதிகள் கூறினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM