பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக இன்று அளித்த பதிலில் ரெயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
மும்பை- அகமதாபாத் அதிவேக ரெயில் செயல்படுத்துவது தாகதமாகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் மற்றும் ஒப்பந்தங்களை முடிப்பதில் தாமதம் மற்றும் கொரோனா தொற்றின் பாதகமான தாக்கம் ஆகியவற்றால் தாமதமானது.
புல்லட் ரெயில் திட்டத்திற்குத் தேவையான 1,396 ஏக்கர் நிலத்தில், சுமார் 89 சதவீதம் அதாவது 1,248 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் இத்திட்டத்திற்கு தேவையான மொத்தம் 297.81 ஏக்கரில் 68.65 சதவீதம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
குஜராத்தில் இத்திட்டத்திற்குத் தேவையான 954.28 ஏக்கர் நிலத்தில் 98.76 சதவீதம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் புல்லட் ரெயில் திட்டத்திற்குத் தேவையான 7.9 ஏக்கர் நிலத்தில் 100 சதவீதத்தை கையகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய அதிவேக ரெயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ், திட்டத்தின் பலன்கள், இழப்பீட்டுத் தொகை மற்றும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிலம் இழந்தவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றைக் குறித்து கிராம மக்களுக்க எடுத்துரைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்றார் புஷ்கர் சிங் தாமி