மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தடாலடியாகப் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாதது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவே இருந்தது. ஆனால் இந்தக் கேப்பில் மொத்த விலையில் வாங்கும் டீசல் விலையை அதிகரித்தது மூலம் மக்களுக்குக் கடுமையான பாதிப்பையும், அரசுக்கு கூடுதல் வருவாயும் அளித்துள்ளது.
2வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் திட்டம் என்ன..? இன்னும் எவ்வளவு விலையை உயர்த்தும்..?
19 வருடத்திற்கு பின் முதல் ஐரோப்பிய தொழிற்சாலையை துவங்கிய டெஸ்லா.. டான்ஸ் ஆடிய எலான் மஸ்க்..!

கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்த நிலையிலும் 5 மாநில தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்னும் ஒரே காரணத்திற்காக 139 டாலர் வரையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதும் கூட இந்தியாவில் சுமார் 137 நாட்கள் ரீடைல் எரிபொருள் விலையில் எவ்விதமான விலை உயர்வும் அறிவிக்கப்படவில்லை.

0.52 ரூபாய் உயர்வு
ஆனால் கடந்த இரண்டு நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 பைசா வரையில் உயர்த்தப்பட்டு உள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு ஒரு டாலர் உயரும் பட்சத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து லாபத்தில் இயங்க வேண்டும் என்றால் லிட்டருக்கு 0.52 ரூபாய் உயர்த்த வேண்டும்.

19 ரூபாய்
137 நாட்களுக்கு முந்தைய கச்சா எண்ணெய் விலை ஒப்பிடுகையில் கிட்டதட்ட 37 டாலர் அதிகமாக உள்ளது. இந்த விலையை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 19 ரூபாய் அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

கலால் வரி
ஆனால் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை ஒப்பிடுகையில் மத்திய அரசு பெட்ரோலுக்கு 9 ரூபாய் கூடுதல் கலால் வரியும், டீசலுக்கு 6 ரூபாய் கூடுதல் கலால் வரியும் பெற்று வருகிறது. இந்த அளவீட்டை குறைத்தால் கூடக் கட்டாயம் மக்களின் சுமையைப் பெரிய அளவில் குறைக்க முடியும்.

இன்றைய பெட்ரோல் விலை
டெல்லி – 97.01 ரூபாய்
கொல்கத்தா – 106.34 ரூபாய்
மும்பை – 111.67 ரூபாய்
சென்னை – 102.91 ரூபாய்
குர்கான் – 97.28 ரூபாய்
நொய்டா – 97.23 ரூபாய்
பெங்களூர் – 102.26 ரூபாய்
புவனேஸ்வர் – 103.81 ரூபாய்
சண்டிகர் – 95.8 ரூபாய்
ஹைதராபாத் – 110.01 ரூபாய்
ஜெய்ப்பூர் – 108.4 ரூபாய்
லக்னோ – 96.73 ரூபாய்
பாட்னா – 107.55 ரூபாய்
திருவனந்தபுரம் – 108.11 ரூபாய்

இன்றைய டீசல் விலை
டெல்லி – 88.27 ரூபாய்
கொல்கத்தா – 91.42 ரூபாய்
மும்பை – 95.85 ரூபாய்
சென்னை – 92.95 ரூபாய்
குர்கான் – 88.51 ரூபாய்
நொய்டா – 88.75 ரூபாய்
பெங்களூர் – 86.58 ரூபாய்
புவனேஸ்வர் – 93.61 ரூபாய்
சண்டிகர் – 82.37 ரூபாய்
ஹைதராபாத் – 96.37 ரூபாய்
ஜெய்ப்பூர் – 91.98 ரூபாய்
லக்னோ – 88.28 ரூபாய்
பாட்னா – 92.69 ரூபாய்
திருவனந்தபுரம் – 95.17 ரூபாய்
Petrol, diesel prices hiked 80 paisa per liter for second consecutive day
Petrol, diesel prices hiked 80 paisa per liter for second consecutive day பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக 80 பைசா உயர்வு.. மத்திய அரசின் கணக்கு என்ன..?!