பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிராகவும், எல்.ஐ.சி ஊழியர்களை போலவே வாரத்தில் ஐந்து நாள் வேலையை அமல்படுத்த வேண்டியும், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், 28, 29-ம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த இரண்டு நாள் போராட்டத்தில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் உள்ளிட்ட பல சங்கத்தினர் கலந்து கொள்ள உள்ளனர்.
கடந்த ஆண்டு மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. அதனை எதிர்க்கும் வகையில் வங்கிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் மக்களுக்கு உதவ மாற்று வழிகளை வங்கிகள் செய்திருந்தாலும் வங்கிச்சேவைகள் குறைந்தளவு பாதிக்கப்பட கூடும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.