Pandian Stores Telugu Version End : சகோதரர்களின் பாசப்பிணைப்பை அடிப்படையாக கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும். சின்னத்திரையில் உதாரணமாக சொல்லும் ஒரே சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இன்றைய இளைஞர்களுக்கு தேவையான ஒற்றுமை மற்றும் குடும்பத்திற்கு தேவையான சகோதர பாசம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளிட்ட பல செயல்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட சில மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் ஹிட் அடித்து்ளளது. தமிழில் ஸ்டாலின் முத்து, சுஜிதா, வெங்கட், குமரன், ஹேமா, காவியா, சாய் காயத்ரி சரவண விக்ரம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் தெலுங்கில் வதினம்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது.
தமிழில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வெற்றிகரமான இன்னும் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதன் கன்னடா பெங்காலி மற்றும் இந்தி ரீமேக் சீரியல்கள் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த வகையில் தற்போது என்ட் கார்டு போட்டுள்ள மொழி தெலுங்கு. தெலுங்கில் வதினம்மா என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ரீமேக் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள சீரியல் குழுவினர், சீரியல் முடிவு பெற்றுவிட்டாதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை கொடுத்தாலும், தங்களது நட்சத்திரங்களுக்கு பிரிய விடை கொடுக்கும் வகையில் அனைவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அதேபோல் தமிழில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனம் என்ற முதன்மை கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா தனுஷ், தெலுங்கிலும் அதே கேரக்டரில் நடித்து வருகிறார். தமிழில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தெலுங்கில் முடித்துக்கொள்ளப்பட்ட ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த கேள்விகளுக்கு சுஜிதா தனது யூடியூப் வீடியோவில் பதில் கூறியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், தமிழில் சீக்கிரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்துவிடுமா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
“ “