பொதுவாக முட்டையின் ஆயுட்காலம் அதிகபட்சம் ஒரு வாரம். பிரிட்ஜில் வைத்திருந்தால் ஓரிரு நாட்கள் அதிகமாக வரும்.
ஆனால் முட்டையை நீண்ட நாட்கள் கெட்டுப் போனாமல் சேமித்து வைக்க சில வழிமுறைகள் உள்ளன.
தற்போது அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
- முட்டையின் ஓட்டின் மீது நாம் சமையலுக்குப் பயன்படுத்துகின்ற ரீஃபைண்ட் ஆயிலை சில துளிகள் எடுத்துத் தடவி வைத்து விட வேண்டும். குறைந்தபட்டசம் 10 முதல் 12 நாட்கள் வரை முட்டை கெடாமல் இருக்கும்.
- முட்டையின் அகலமான வட்ட வடிவ பகுதி மேலே இருக்கும்படியும் சற்று அகலம் குறைந்த நீள்வட்ட பகுதி கீழே இருக்கும்படியும் தான் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் மஞ்சள் கரு முட்டையின் நடுப்பகுதியில் அப்படியே இருக்கும். முட்டையும் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்கும்.
- முட்டை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க ஒவ்வொரு முட்டையும் தனித்தனியாக எடுத்து ஒரு ஒரு டிஸ்யூ பேப்பரில் சுற்றி எடுத்து வைத்து உடையாதபடி வைக்க வேண்டும்.
- முட்டையை ஃபீரிசரில் அப்படியே வைக்காமல் ஒரு கின்னத்தில் உடைத்து ஊற்றி ஃப்ரீசரில் வைத்துவிட்டால் முட்டையும் உடையாது. நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும்.
- முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் முட்டையின் ஓட்டிலும் உட்பகுதியிலும் சால்மனெல்லா என்னும் பாக்டீரியா இருப்பதனால் சாதாரண வெப்பநிலையைக் காட்டிலும் குளிரான இடத்தில் அதிகமாக வளருவதனால் முட்டையை பிரிட்ஜில் வைக்கும்போது முட்டையில் மட்டுமல்லாமல் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் மற்ற பொருள்கள், காய்கறிகளின் மீதும் இந்த பாக்டீரியா பரவ வாய்ப்பு உள்ளது.