கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 10 உயிரோடு தீ வைத்து எரித்துகொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் சில காலமாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த கொடூர சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவத்தன்று மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டம் பர்ஷால் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக இருக்கும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பாதுஷேக் என்பவர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது. மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பாதுசேக் உயிரிழந்த நிலையில், அவரது அவரது சொந்த கிராமமான பாக்துய் கிராமத்தை கும்பல் மற்றொரு தரப்பினருக்கு சொந்த இடங்களில் தீ வைத்தனர். இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தி, வீடுகளுக்குள் சென்று தேடி பார்த்தபோதுதான், 10 பேரின் உடல்கள் தீயில் கருகி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறை, குற்றவாளி தேடி வருவதாக கூறியுள்ளது.சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு, தீ விபத்துக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.
இதையடுத்து மேற்குவங்க முதல்மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவின் பேரில், திரிணாமுல் காங்கிரஸ் குழு ஒன்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.