கோல்கட்டா: மேற்கவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் 8 பேர் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில், பிர்பும் மாவட்டத்தில் உள்ள பர்ஷல் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவராக திரிணமுல் காங்., கட்சியின் பாதுஷேக் என்பவர் கடந்த 21ம் தேதி மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக பர்ஷல் கிராமத்துக்குள் புகுந்த ஒரு கும்பல், அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்தது. இதில், இரு குழந்தைகள் உட்பட எட்டு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உட்கட்சி தகராறில் இந்த கொடூர சம்பவம் நடந்த கூறப்படுகிறது.
குற்றவாளிகளுக்கு மன்னிப்பு கிடையாது
இது குறித்து பிரதமர் கூறியது, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர என்னென்ன உதவிகள் தேவையோ அதை மாநில அரசுக்கு செய்ய காத்திருக்கிறோம். குற்றவாளிகள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். இதுபோன்ற குற்றவாளிகளை ஆதரிப்பவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என என்றார்.
‘கடும் நடவடிக்கை பாயும்!’
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: படுகொலை நடந்த கிராமத்திற்கு நேரடியாக சென்று நிலைமையை பார்வையிட உள்ளேன். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement