ரஷ்யாவை அசைக்க முடியாது.. உலகம் முழுவதும் வர்த்தகம்..!

உக்ரைன் மீதான போருக்கு பின்பு ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மொத்தமாக தடை செய்துள்ள நிலையில், மற்ற நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய்யை தவிர்க முடியாமலும், இந்தியா போன்ற நாடுகள் எப்போதும் இல்லாத வகையில் அதிக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்-ஐ வாங்க துவங்கியுள்ளது.

வல்லரசு நாடுகள் கட்டம் கட்டி ரஷ்யா மீது தடை விதித்த நிலையிலும் பல நாடுகளால் ரஷ்யா கச்சா எண்ணெய் இல்லாமல் இயங்க முடியாத நிலை உள்ளது. இதன் மூலம் ரஷ்யா தனது ஆதிக்கத்தை காட்டியுள்ளது.

தங்கத்திற்கு சூப்பர் தள்ளுபடி.. 6 ஆண்டுகளில் இல்லாதளவு உச்சம்.. ஜாக்பாட் தான்!

சரி, உக்ரைன் மீதான போருக்கு பின்பும் எந்தெந்த நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது தெரியுமா..?!

பல்கேரியா, ஜெர்மனி

பல்கேரியா, ஜெர்மனி

பல்கேரியா-வின் நெஃப்டோசிம் பர்காஸ் சுத்திகரிப்பு ஆலை சுமார் 60 சதவீத எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது.

ஜெர்மனி நாட்டின் மிரோ, PCK SCHWEDT, LEUNA போன்ர முன்னணி சுத்திகரிப்பு ஆலைகள் அனைத்தும் ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் வாங்குகிறது.

 

கிரீஸ், இத்தாலி

கிரீஸ், இத்தாலி

கிரீஸ் நாட்டின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையாக விளங்கும்
ஹெலனிக் பெட்ரோலியம் சுமார் 15 சதவீத கச்சா எண்ணெய்-ஐ ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது

இத்தாலி நாட்டின் ISAB என்னும் சுத்திகரிப்பு ஆலை அதிகளவிலான ரஷ்ய கச்சா எண்ணெய்-ஐ நம்பிதான் இயங்குகிறது.

 

ஹங்கேரி, ஸ்லோவாக்கியா,
 

ஹங்கேரி, ஸ்லோவாக்கியா,

ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, குரோஷியா, லிதுவேனியா, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் சுத்திகரிப்பு ஆலைகள், டென்மார்க் நாட்டின் ஜீலாந்து மற்றும் ரோட்டர்டாம் சுத்திகரிப்பு நிலையம், இந்தியாவில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பிரிட்டன் நாட்டின் BP.

ஷெல், டோட்டல் எனர்ஜி, வாரோ எனர்ஜி

ஷெல், டோட்டல் எனர்ஜி, வாரோ எனர்ஜி

ஜப்பான் நாட்டின் ENEOS, நார்வே நாட்டின் ஈக்வினார், போர்ச்சுகல் நாட்டின் GALP, பினலாந்து நாட்டின் NESTE, ஸ்வீடன் நாட்டின் PREEM, ஸ்பெயின் நாட்டின் REPSOL, அதை தொடர்ந்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ஷெல், டோட்டல் எனர்ஜி, வாரோ எனர்ஜி ஆகியவை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

russia – ukraine war: After sanctions Who is buying Russian crude oil

russia – ukraine war: After sanctions Who is buying Russian crude oil ரஷ்யாவை அசைக்க முடியாது.. உலகம் முழுவதும் வர்த்தகம்..!

Story first published: Wednesday, March 23, 2022, 17:39 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.