வாஷிங்டன்:உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை கண்டிக்க, இந்தியா நடுங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ‘
அமெரிக்க வெள்ளை மாளிகையில், ஜோ பைடன் தலைமையில், முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. ரஷ்யா மீதான பொருளாதார தடையின் தாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்ட இக்கூட்டத்தில், ஜோ பைடன் பேசியதாவது:\
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை, அமெரிக்காவின் பெரும்பாலான நட்பு நாடுகள் ஓரணி யில் நின்று கண்டித்துள்ளன. ஆனால், இந்தியாவுக்கு ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதில், சிறிது நடுக்கம் உள்ளது. ரஷ்ய அதிபர் புடின் எப்படிப்பட்டவர் என்பது எனக்குத் தெரியும். அவர் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய, ‘நேட்டோ’ கூட்டணியை உடைக்க முயற்சித்தார்.ஆனால், கூட்டணி இவ்வளவு வலுவாக இருக்கும் என, அவர் எதிர்பார்க்கவில்லை.
இந்தியா நீங்கலாக, இந்தோ – பசிபிக் கடல் பிராந்திய பாதுகாப்புக்கான ‘குவாட்’ அமைப்பும், ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ரஷ்யாவை கண்டித்து அமெரிக்கா கொண்டு வந்த மூன்று தீர்மானங்கள் மீது நடந்த ஓட்டெடுப்பில், இந்தியா பங்கேற்காமல் நடுநிலை வகித்தது.
Advertisement