ராணுவக் கண்காணிப்பில் பெட்ரோல் டீசல் விற்பனை ! மோசமாகும் பொருளாதாரம்! தள்ளாடும் நாடு…

இலங்கையில், எண்ணெய் உட்பட அனைத்து பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் இங்கு ஒவ்வொரு நாளும் சாதனை உச்சத்தை எட்டுகிறது. இதற்கு அரசின் தவறான முடிவுகள் உட்பட பல காரணங்கள் உள்ளன.

எரிபொருள் விற்பனையின்போது கும்பல் வன்முறை ஏற்படாமல் தடுக்கும் விதமாக, இந்த நாட்டின் அனைத்து பெட்ரோல் பம்புகளிலும் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், ராணுவத்தின் கண்காணிப்பில் பெட்ரோல்-டீசல் விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. 

 

இந்த சூழ்நிலையில், வன்முறையில் மக்கள் ஈடுபடுவதைத் தவிர்க்கும்  முயற்சியாக, பெட்ரோல்-டீசல் விற்பனையை கண்காணிக்க ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக குறைந்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்க விகிதம் தினசரி புதிய உச்சங்களை எட்டுகிறது.

மேலும் படிக்க | வாழத் தகுதியற்ற நாடாக மாறுகிறதா இலங்கை?

இந்தியா-சீனாவிடம் இருந்து நிதி உதவி 
இலங்கையில் உணவு தானியங்கள், சர்க்கரை, காய்கறிகள் மற்றும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் காரணமாக, மக்களின் செலவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது, ஆனால் அவர்களின் வருமானம் அப்படியே உள்ளது.

தற்போது உணவு தானியங்கள், எண்ணெய், மருந்துகள் வாங்குவதற்கு அரசு கடன் வாங்க வேண்டியுள்ளது. நிலைமை மோசமாவதை கருத்தில் கொண்டு, இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

சீனாவும் இலங்கைக்கு 2.5 பில்லியன் டொலர் கடனை வழங்குகிறது.

1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர், இந்த அளவு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது.

இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசலுக்கான நீண்ட வரிசைகளை கருத்தில் கொண்டு, அரசாங்கத்தின் பெட்ரோல் பம்புகளில் செவ்வாய்க்கிழமை இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். 

பெட்ரோல் பங்க்குகளில் விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக ராணுவத்தை இங்கு நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லுகோகே கூறியதாக செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது. 

கள்ளச் சந்தையில் பெட்ரோல் டீசல் விற்பனை நடைபெறுவதை தவிர்க்கவும், அனைவருக்கும் பெட்ரோல் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மக்கள் வேதனை; 137 நாட்களுக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
 
LPGக்கு நீண்ட வரிசைகள்
பெட்ரோலுக்கு மட்டுமின்றி எல்பிஜிக்கும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்ற 4 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் 3 பேர் முதியவர்கள். 

வரிசையில் நின்றவர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவினால் கத்திக்குத்து வரை போன சம்பத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது தவிர இலங்கையில் மிகப் பெரிய அளவில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில், அதிகபட்சமாக ஏழரை மணி நேரம் வரை மின்வெட்டு என்று அரசு அறிவித்திருந்தது.

மோசமான நிதி நிலைமை
பிப்ரவரியில் இலங்கையின் மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 2022 ஜனவரியில் 2.36 பில்லியன் அமெரிக்க டாலர்களாக  குறைந்துள்ளது.

ரஷ்யா – உக்ரைனில் ஏற்பட்ட யுத்தத்தினால் (Russia-Ukraine War) இலங்கையின் பொருளாதார நிலை மேலும் மோசமடையலாம். இலங்கையின் தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடு ரஷ்யா. 

மேலும் படிக்க | ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் ரூ.38 ஊக்கத்தொகை!

இலங்கை பொருளாதாரம் ஏன் இவ்வளவு மோசமடைந்தது?

இலங்கையின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாத்துறையில் தங்கியுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்கு சுமார் பத்து சதவீதம்.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றாக நிறுத்தப்பட்டதுடன், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பும் குறைந்துள்ளது. இதன் காரணமாக கனடா போன்ற பல நாடுகள் இலங்கையில் முதலீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

அரசின் தவறான முடிவுகள்
கோவிட் ஏற்படுத்திய சேதத்துடன், இலங்கை அரசாங்கம் சில தவறுகளை செய்தது, இது அதன் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. 

மேலும் படிக்க | உக்ரைனில் இருந்து 2389 குழந்தைகளை கடத்திய ரஷ்ய ராணுவம்

உதாரணமாக, 2019 இல், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், மக்களின் செலவுத் திறனை அதிகரிக்க வரியைக் குறைத்தது. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

நாட்டில் ரசாயன உரங்கள் மூலம் விவசாயம் செய்வதை நிறுத்த வேண்டும் என்ற உத்தரவும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நிபுணர்களின் கூற்றுப்படி, இது பயிர் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

இது தவிர, இலங்கையின் கடன் சுமை அதிகரித்து வருவதும் பொருளாதார  பின்னடைவுக்கு காரணமாக உள்ளது.  சீனாவிடமிருந்து மட்டும் 5 பில்லியன் டொலர்களை இலங்கை கடனாகப் பெற்றுள்ளது. இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளிடமும் கணிசமான அளவு கடன் பெற்றுள்ளது இலங்கை. 

மேலும் படிக்க | 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல்லுக்கு வரும் அதிரடி வீரர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.