அரியலூர் மாவட்டத்தில் மொபைல் டவர் அமைக்க முன்பணமாக 40 லட்சம் ரூபாய் தருவதாக வந்த குறுஞ்செய்தியை நம்பி ரூபாய் 24 லட்சம் ரூபாயை ஏமாற்றிய டெல்லி சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலை அரியலூர் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
காமரசவல்லி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மொபைல் போனிற்கு, செல்போன் டவர் அமைக்க முன்பணமாக 40 லட்சம் ரூபாய் மற்றும் மாதம் வாடகையாக 40 ஆயிரம் ரூபாய் தருவதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை நம்பிய அவர் மொபைலில் தொடர்பு கொண்டவர்களிடம் கிட்டத்தட்ட 24 லட்சம் ரூபாய் ஏமாந்து விட்டதாக அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் டெல்லி சகர்பூர் பகுதியில் இருந்த மருதுபாண்டியன், ராஜேஷ் ,முருகேசன், ராஜ்கிரண் ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர்.