அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை மிகப்பெரிய சூறாவளி கடந்து சென்ற காட்சிகளை உள்ளூர்வாசி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்த சூறாவளி அம்மாகாணத்தில் பல வீடுகளை சேதமடைய செய்திருப்பதுடன், பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சால்மெட்-ல் வசிக்கும் பிரையன் டெலன்சி என்பவர் தனது வீட்டில் இருந்தபடி, சூறாவளி கடந்து செல்லும் காட்சிகளை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் வீடுகளுக்கு மேலாக புனல் வடிவத்தில் கருப்பு நிற சுறாவளி காற்று சுழன்று செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.அதனிடையே மின்னிய மின்னல்கள் நீல நிறத்தில் காட்சியளித்தன.
இந்த சூறாவளி நியூ ஆர்லியன்ஸ் நகரையும் தொட்டுச்சென்றதுடன், அதன் அருகே இருந்த பகுதிகளையும் கடுமையாக தாக்கியதில் அராபி, கிரெட்னா மற்றும் St. Bernard Parish பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு லூசியானா கடற்கரைப்பகுதியில் இருந்து வீசிய அதி தீவிர இடா புயலின் பாதிப்புகளில் இருந்தே அப்பகுதி மக்கள் இன்னும் மீளாத சூழலில் தற்போது வீசி வரும் சூறாவளியும் கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.