#லைவ்அப்டேட்ஸ் உக்ரைன்- ரஷியா போர்: 15,300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தகவல்

 23-03-2022


11.40: தாங்களுக்கு வரும் உத்தரவை சிந்திக்காமல் செயல்படுத்தும் ரஷிய விமானப்படை விமானிகளுக்கு, பொதுமக்களை கொல்வது குற்றம். அதற்கு விலை கொடுப்பீர்கள் என ஜெலன்ஸ்கி செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

11.35: மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான இணைய தளத்தை உக்ரைன் வெளியிட்டுள்ளது. help.gov.ua

11.35: ரஷியாவைச் சேர்ந்த 15,300 வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளத.

11.32: ஆப்கானிஸ்தான் மீது சோவியத் போர் தொடுத்தபோது ஏற்பட்ட இழப்பை விட தற்போது உக்ரைன் போரில் ரஷியா அதிகமாக ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

11.28: புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது ஆதங்கத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

09.15: அங்கீகரிக்கப்பட்ட மனிதாபிமான வழித்தடத்தில் மக்கள் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். 11 பேருந்து ஓட்டுனர்கள், 4 மீட்புப்பணி ஊழியர்களை ரஷியப் படைகள் பிடித்து வைத்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

09.14: ஜி20 நாடுகளில் ரஷியா இருக்க வேண்டுமா என்று அமெரிக்காவும், அதன் மேற்கத்திய கூட்டு நாடுகளும் மதிப்பீடு செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

09.12: மரியுபோல் நகரில் உணவு, தண்ணீர், மருத்துவ உதவி கிடைக்காமல் தாக்குதலுக்கு இடையே ஒரு லட்சம் பேர்  சிக்கித் தவிப்பதாக உக்ரைன் அதிபர ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

06.50: ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பிராந்தியங்களில் இருந்து 2,389 உக்ரைன் குழந்தைகள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. 
05.10: உக்ரைனில் போர் பகுதிகளில் உள்ள ரஷியா படையினர் உணவு மற்றும் எரிபொருளைப் பெறுவதில் சிரமத்தை சந்தித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
04.45.உக்ரைன் நகரங்கள் மீது  ரஷிய படைகள் வான்வெளி, தரைவழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், துறைமுக நகரமான மரியபோல் மீது ரஷிய போர் கப்பல்கள் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
04.10: உக்ரைனில் உள்ள முக்கியமான இலக்குகளை தாக்குவதற்கு அதி நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து பயன்படுத்துவதாக ரஷியா குறிப்பிட்டுள்ளது.
3.30:உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பால் உக்ரைன் மக்கள் 30 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. உக்ரைன் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில், 10,000 ஆயிரம் ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
12.10: ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டதாக ஐ.நா.பொதுச் செயலாளர்  ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கும் மேலாக மரியுபோல் நகரில் ரஷிய ராணுவம் இடைவிடாது குண்டுவீச்சு தாக்குதல் நடத்துவது எதற்காக என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த போர் மூலம் துன்பம், அழிவு மட்டும் ஏற்படும் என்றும் போரினால் எதையும் வெல்ல முடியாது என்றும் குறிப்பிட்டார்.

22-03-2022
20.20: ரஷியா நாட்டின் மீது எங்களால் பொருளாதார தடைவிதிக்க முடியாது. ரஷிய ஊடகங்களை நாங்கள் தடைசெய்ய மாட்டோம் என செர்பிய உள்துறை மந்திரி அலெக்சாண்டர் வுலின் தெரிவித்துள்ளார்.

18.00: உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால சிறப்பு அமர்வு கூட்டம் நாளை (மார்ச் 23) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.