கீவ்,
உக்ரைன் மீது ரஷியா 28- வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-
மார்ச் 23, 21.30
மார்ச் 23, 20.32
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். தனது உரையின் போது, ரஷியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
மார்ச் 23, 19.30
ரஷிய அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக ரஷிய தூதர் கூறினார். உக்ரைன் போர் காரணமாக, ரஷியாவை ஜி20 அமைப்பில் இருந்து வெளியேற்றலாம் என்ற பரிந்துரைகளை அவர் நிராகரித்தார்.
மார்ச் 23, 17.30
ரஷிய தூதரக அதிகாரிகள் 45 பேரை வெளியேற்ற போலந்து முடிவு
உளவு வேலையில் ஈடுபடுவதாகக் கூறி ரஷிய தூதரக அதிகாரிகள் 45 பேரை போலந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. போலந்து நாட்டின் உள்பாதுகாப்பு முகமை வெளியிட்ட பட்டியலில், போலந்தில் தூதரக பணிகள் என்ற பெயரில் 45 பேர் உளவு வேலையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரஷிய ரகசிய சேவை அமைப்புக்கு உளவு தகவல்கள் அளிக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலந்து நாட்டை சேர்ந்த ஒருவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 23, 16.20
மரிங்கா நகரை ரஷிய ஆதரவு போராளிகள் கைப்பற்றினர்
ரஷியாவால் தன்னாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் டோனட்ஸ்க் பகுதியில் உக்ரைன் ராணுவத்தினர் விட்டுச் சென்ற ஆயுதங்களை ரஷிய ஆதரவு போராளிகள் கைப்பற்றினர்.
அங்குள்ள மரிங்கா நகரில் உக்ரைன் படைகளுக்கும், ரஷிய ஆதரவு போராளிகளுக்கும் கடும் போர் நடந்து வந்தது. அந்நகரை கைப்பற்றிய போராளி குழுவினர், உக்ரைன் வீரர்கள் விட்டுச் சென்ற ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றினர்.
மார்ச் 23, 15.30
ஜி 20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க சீனா ஆதரவு
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், விரைவில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் ரஷியாவை புறக்கணிக்க அமெரிக்கா வலியுறுத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இவ்விவகாரத்தில் ரஷியாவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ள சீனா, ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பில் ரஷியா மிக முக்கியமான உறுப்பினர் என்று சீனா தெரிவித்துள்ளது.
மார்ச் 23, 14.40
ஜெலன்ஸ்கிக்கு நேட்டோ அழைப்பு…போரில் புதிய திருப்பம்
ஜெலன்ஸ்கிக்கு திடீர் அழைப்பு விடுத்து உள்ளது. ரஷியாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைன் மக்கள் எதிர்கொள்ளும் மோசமான நிலைமை குறித்து நேரடியாகக் கேட்டறிய, நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மார்ச் 23, 13.40
ஜெலன்ஸ்கிக்கு நேட்டோ அழைப்பு…போரில் புதிய திருப்பம்
ஜெலன்ஸ்கிக்கு திடீர் அழைப்பு விடுத்து உள்ளது. ரஷியாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைன் மக்கள் எதிர்கொள்ளும் மோசமான நிலைமை குறித்து நேரடியாகக் கேட்டறிய, நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 23, 13.10
மார்ச் 23, 11.56 AM
மார்ச் 23, 11:50 AM
உக்ரைன் மீது தாக்குதலை அதிகரித்துள்ள ரஷியா உள்நாட்டில் அடக்குமுறையை தீவிரப்படுத்தி உள்ளது என என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறி உள்ளது.
மார்ச் 23, 10:45 AM
ரஷியாவின் கடுமையான குண்டுவீச்சுக்கு மத்தியில், உணவு, தண்ணீர் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாமல் மேரியோபோல் நகரில் ஒரு லட்சம் பேர் உள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
“இன்றைய நிலவரப்படி, மேரியோபோல் நகரத்தில் சுமார் 1,00,000 மக்கள் உள்ளனர். மனிதாபிமானமற்ற சூழ்நிலையில், ரஷ்ய படையெடுப்பால் உணவு, தண்ணீர் , மருந்து இல்லாமல் இருக்கின்றனர். தொடர்ச்சியான குண்டு வீச்சு மற்றும் குண்டுவெடிப்புக்கு மத்தியில் இவர்கள் உள்ளனர்”, என்று அவர் தனது இரவு நேர சமூக ஊடக உரையில் கூறினார்.
மார்ச் 23, 9:00 AM
மார்ச் 23, 8.45 AM