கடந்த 2021-ம் ஆண்டிற்கான உலகக் காற்றுத் தர அறிக்கையின்படி (World Air Quality Report) உலகிலேயே அதிக காற்று மாசுபாடு கொண்ட நகரங்களில் முதல் பதினைந்து இடங்களில் பத்து இடங்களில் இந்தியாவின் வட மாநில நகரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்தியாவின் தலைநகரான டெல்லி உலகிலேயே அதிக காற்று மாசுபாடு கொண்ட தலைநகராக இடம்பெற்றுள்ளது.
மேலும், டெல்லியின் காற்று மாசுபாடு உலகளவில் 4வது இடத்தில் உள்ளது. இதையடுத்து ராஜஸ்தானின் பிவாடி, அதைத் தொடர்ந்து டெல்லியின் கிழக்கு எல்லையில் உள்ள உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்,ஜெயன்பூர், பகப்பட், நொய்டா மற்றும் கிரேட் நொய்டா போன்ற நகரங்களும்; ஹரியானாவில் உள்ள ஹிஸார், பாரிடப்பட் மற்றும் ரோஹடக் நகரங்களும் உள்ளன. இப்படி முதல் 15 மாசுபட்ட நகரங்களில் பத்து நகரங்கள் இந்தியாவில் உள்ளவை. அவற்றில் பெரும்பாலான நகரங்கள் இந்தியாவின் தேசியத் தலைநகரைச் சுற்றி உள்ளன. மேலும், காற்று மாசுபாட்டுப் பட்டியலில் முதல் 100 இடங்களில் 63 இடங்கள் இந்தியாவில் உள்ளன என்பது வருந்தத்தக்கது.