விசா கிடைப்பதில் தாமதம் : சென்னை அணியின் முதல் போட்டியை தவறவிடும் மொயின் அலி..!

மும்பை,
ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் மொயின் அலி, முதல் போட்டியில் விளையாட மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது .
மொயின் அலிக்கு விசா இன்னும் கிடைக்காததால்,  அவர் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுளள்து . இதனால், சென்னை அணியின் முதல் போட்டியில் மொயின் அலி  பங்கேற்கமாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.