ஒப்போ நிறுவனம் பிப்ரவரி 4ஆம் தேதி தனது ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதனுடன் தனது புதிய
ஒப்போ வாட்ச்
பிரீ ஸ்மார்ட்வாட்சையும் அறிமுகப்படுத்தியது. இந்த தகவல் சாதனங்கள் முன்னதாகவே சீன சந்தையில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், Smart watch வெளியாகி இன்னும் விற்பனைக்குக் கொண்டுவர வில்லையே என பயனர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில், புதிய
Oppo
ஸ்மார்ட்வாட்ச் விற்பனை குறித்த தகவலை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, 29 மார்ச் 2022 அன்று நண்பகல் 12 மணிக்கு Flipkart ஷாப்பிங் தளத்தில், இந்த ஸ்மார்ட் வாட்சின் முதல் விற்பனை தொடங்கும் என நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் அதிக அம்சங்களைக் கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்வாட்ச் இதுவாகத் தான் இருக்கும் என ஒப்போ விளம்பரம் செய்து வருகிறது.
ஒப்போ ஸ்மார்ட் வாட்ச் டிஸ்ப்ளே
தற்போது வெளியிடப்பட்ட
Oppo Watch Free
ஸ்மார்ட்வாட்ச் அமோலெட் (AMOLED) தொடுதிரையுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் திரையின் அளவு 1.64″ அங்குலமாக உள்ளது. இது 280 x 456 பிக்சல் ரெசலியூஷனைக் கொண்டது. 16.7 மில்லியல் பிக்சல் நிற ஆதரவும் இதில் உள்ளது. 2.5டி கிளாஸ் பாதுகாப்பும் இந்த திரைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்வாட்சில் ப்ளூடூத் 5.0 இணைப்பு ஆதரவு உள்ளது. 6-ஆக்சிஸ் அக்செலரேஷன், கைரோஸ்கோப் சென்சார், ஆப்டிகல் இதய துடிப்பு சென்சார், ஆப்டிகல் ரத்த ஆக்ஸிஜன் சென்சார், சுற்றுப்புற ஒளி சென்சார் ஆகியன கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்ச் இரு வண்ணத் தேர்வுகளில் அறிமுகம் ஆகியுள்ளது. வென்னிலா, கருப்பு ஆகிய நிறங்களில் இது கிடைக்கிறது.
புதிய Samsung AC உடன் #PowerfulAndGentle ஆக குளிரை அனுபவிக்கும் புரட்சிக்கு தயாரா?
ஒப்போ ஸ்மார்ட் வாட்ச் சிறப்பம்சங்கள்
தோற்றத்தில் ஹானர் நிறுவனத்தின் ஸ்மார்ட்பேண்ட் போலவே ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்சின் வடிவமைப்பு உள்ளது. இதில் நடப்பது, ஓடுவது, சைக்ளிங், ஸ்கிப்பிங், இறகுபந்து, கூடைபந்து, கால்பந்து, ஜாக்கிங், ஹைக்கிங், டென்னிஸ், ரக்பி, கோல்ஃப், யோகா, உடற்பயிற்சி, பேஸ்பால் போன்றவைகளை தொடர்ந்து கண்காணிக்கும் அம்சங்கள் உள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் 5 ஏடிஎம் நீர் பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்சானது 230mAh பேட்டரி திறன் கொண்டு செயல்படுகிறது. இதனை ஊக்குவிக்க 5V திறன் கொண்ட மேக்னெட்டிக் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை சார்ஜ் செய்தால், 14 நாள்கள் வரை இந்த ஸ்மார்ட்வாட்சை பயன்படுத்தலாம். மெசேஜ், அழைப்புகளுக்கான நோட்டிபிகேஷனும் போன்ற அம்சங்களும் உள்ளது. இந்தியாவில் 5,999 ரூபாய்க்கு இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
Read more:
உயிரை காத்த Apple வாட்ச் – ஹரியானாவில் நடந்த உண்மை சம்பவம்!OnePlus வெளியிடப்போகும் 6 ஸ்மார்ட்போன்கள்Nothing Event: எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா ‘Naked’ பிராண்ட்!