வெகு விமர்சையாக நடைபெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்

புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் 199 ஆம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்ஹா அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு கந்தூரி விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு 199 ஆவது ஆண்டு கந்தூரி விழா கடந்த 13ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
image
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்றிரவு 10 மணிக்கு தர்காவில் இருந்து புறப்பட்ட சந்தனக்கூடு மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்ட பல்லாக்கு, கப்பல் போன்ற 20-க்கும் மேற்பட்ட ஊர்திகள் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காலை 4 மணிக்கு தர்கா வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து மஸ்தான் சாகிப் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.
image
இந்த சந்தனக்கூடு விழாவில் காரைக்கால் மாவட்டம் மட்டும் இல்லாமல் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்திருந்தது. மேலும் புதுச்சேரியில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.