ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் ஐடி ரெய்டு .. 25 இடங்களில் அதிரடி சோதனை.!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாக நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பின் அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய உயர் அதிகாரிகள் என 25 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி, குருகிராம் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள அலூவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த அதிரடியான சோதனையானது ஹீரோ மோட்டோகார்ப்பின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பவன் முஞ்சால் உள்பட பலரையும் உள்ளடக்கியதாக கூறப்படுகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஐடி நடவடிக்கையானது தற்போது வரையில் தொடர்ந்து கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

I-T dept conducts search operations at premises linked to hero Motocorp

I-T dept conducts search operations at premises linked to hero Motocorp/ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் ஐடி ரெய்டு .. 25 இடங்களில் அதிரடி சோதனை.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.